
உத்வேக குரு விருது.
கோயம்புத்தூர் 3 – கோயம்புத்தூரில் இயங்கி வரும் எஸ் எஸ் வி எம் கல்வி குழுமமானது ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் சிறந்து விளங்கும் 20 ஆசிரியர்களை தேர்வு செய்து உத்வேக குரு என்ற விருதினை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை Transforming Conclave India – AI and Humanity என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தங்களது தனி திறமையை வெளிக்கொணர்ந்தனர். இந்தியா முழுவதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 18 ஆசிரியர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இதில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் வசந்தகுமார் அவர்களை தேர்வு செய்து உத்வேக குரு என்ற விருதினை Google கல்விக் குழுமத்தின் தலைவர் சஞ்சய் ஜெயின் மற்றும் எஸ் எஸ் பி எம் கல்விக் குழுமங்களின் தலைவர் ர் மணிமேகலை அவர்களும் இணைந்து வழங்கி சிறப்பித்தார்கள்.






