March 2, 2026
மகிழ்வோம்!

மகிழ்வோம்!

கடப்பது தனே காலமும் நேரமும்
கழலுவது தானே இரவும் பகலும்
தேடுவது தானே சுகமும் இறுப்பும்
தொலைவது தானே ஓட்டமும் நடையும்
அறிவது தானே அழகும் இளமையும்
ஆளுவது தானே இருட்டும் கனவும்
பாடுவது தானே பசியும் சுவையும்
பழக்கம் தானே நட்பும் உறவும்
தெளிவது தானே காலையும் மாலையும்
தேடுதல் தானே சுகமும் உணர்வும்
போடுதல் தானே புதிதும் களைவும்
புகுவது தானே வாழ்க்கை செலவும்
மாறி மாறி உணர்வுகள் அறிவோம்
மகிழ்ந்து மகிழ்ந்து ச்சீச்சீயென உதர்வோம்
அறிந்து அறிந்து எதற்கென களைவோம்
அதற்கே விடிந்தது பொழுதென மகிழ்ஓம்!

பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *