
பழனி அருகே பாலசமுத்திரத்தில் சமூக விரோதிகள் சிலர் கூட்டு சேர்ந்து செங்கல் சூளை, மீன் கடை ஆகியவற்றை இயந்திரங்களின் உதவி கொண்டு உடைத்ததால் பரபரப்பு..!
பழனியில் இருந்து பாலசமுத்திரம் செல்லும் வழியில் நல்லாம்பாளையம் என்ற இடத்தில் மக்புநிஷா என்பவருக்கு இடம் உள்ளது.
விவசாய பயன்பாட்டுக்கு போக மீதி இடத்தை மீன் கடைக்கும், செங்கல் சூளைக்கும் வாடகைக்கு விட்டுள்ளார்.
விவசாய நிலத்தை சிவசெல்வன் என்பவரும், செங்கல் சூளையை ரவிச்சந்திரன் என்பவரும், மீன் கடையை காளிமுத்து என்பவரும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஆயிஷா மற்றும் அவரது மகன் காஜா மைதீன் மற்றும் 10 பேர் கொண்ட கும்பல் ஜேசிபி இயந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு வந்து அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததோடு அங்கிருந்த மீன் கடை, செங்கல் சூளை தொழிலாளர்கள் தங்கும் வீடு என அனைத்தையும் இடித்து தள்ளியுள்ளனர்.
இதுகுறித்து பழனி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இந்த இந்த சம்பவத்திற்கு போலீசாரும் உடந்தையாக இருந்து வழக்கு பதிவு செய்ய காலம் தாழ்த்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.






