July 26, 2026
பழனியில் த.வெ.க சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா...

பழனியில் த.வெ.க சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா...

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் இரவுண்டானாவில் கல்வி வள்ளல் காமராசரின் 124 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான காமராசரின் புகழை போற்றும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக காமராஜர் திருவுருவப்படம் வைக்கப்பட்டு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன..

இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகி மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சஞ்சய், சுரேஷ், விக்டர், சிராஜுதீன், நிவாஸ், தௌபிக், ஆஷிக்,
பிரசன்னகுமார், இராகுல், சங்கர், சிவா, தினேஷ், கௌதம் கண்ணன், அனஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து காமராஜரின் புகழ் பாடுவிதமாக பல்வேறு கோஷங்களை எழுப்பி மலர் தூவி காமராஜருக்கு புகழ் சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *