
புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையில் உதவிய இயக்குனராக பணிபுரியும் முனைவர் கி. குலசேகரன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது !
செய்தி குறிப்பு :
மதுரையில் உள்ள அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் 2025 விருது வழங்கும் விழா நேற்று (31.08.2025) நாரத கானா சபா, தேனாம்பேட்டை, சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் முனைவர் குலசேகரன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பசுமைத் தாயகத்தின் தலைவர் முனைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள், முனைவர் ஞானசம்பந்தம் பேராசிரியர் அவர்கள், நடிகர் நகைச்சுவை மன்னன் திரு.பாலா அவர்கள், நீதியின் குரல் நிறுவனர் முனைவர் C. R. பாஸ்கரன் அவர்கள், மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
முனைவர் கி. குலசேகரன் அவர்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்தாலும் தற்போது அவர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் 1990-ஆம் ஆண்டு B.Sc. (Zoology) பட்டப் படிப்பு தாகூர் கலைக் கல்லூரியில் முடித்த உடனே புதுச்சேரி காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார்.
புதுச்சேரி காவல்துறையில் நவம்பர் மாதம் 1990 ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 2001-ஆம் ஆண்டு வரை சிறப்பாக காவல்துறையில் பணிபுரிந்து பல்வேறு காவல்துறையின் பாராட்டு சான்றிதழ்களை பெற்றவர்.
இவர் காவல் துறையில் பயிற்சியின் போது Human Behavior என்ற பாடத் பிரிவில் முதலிடம் பெற்றார். காவல்துறையில் பணியில் இருக்கும் போதே இவர் காவல்துறையின் பல்வேறு பாராட்டு சான்றிதழ்களும் ரொக்க பரிசுகளும் பெற்றுள்ளார்.
காவல்துறையில் பணியில் இருக்கும் போதே B.Ed., M.A. (Journalism) மற்றும் LL.B. பட்டப் படிப்புகளை படித்து தேர்ச்சி பெற்றார். அதன் விளைவாக 2001-ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து காரைக்கால் மாவட்டத்திற்கு, காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையின் மாவட்ட உதவி இயக்குனர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
2024-ஆம் ஆண்டு இவர் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பர துறையின் உதவி இயக்குனராக (அரசிதழ் பதிவுப்பெற்ற அதிகாரி) பணியில் நிரந்தரம் செய்யப்பட்டார்.
இவர் காரைக்கால் மாவட்டத்திற்கு, செய்தி மற்றும் விளம்பரத் துறையின் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்த பின்பு காரைக்கால் மாவட்ட அரசு செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்.
இவர் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்த பின்பு பேப்பர் மூலம் செய்திகளை வெளியிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டு, அனைத்து தகவல்களும் பத்திரிகைகள், ஊடகங்கள், மற்றும் சோசியல் மீடியாக்களில் செய்திகளை உடனுக்குடன் டிஜிட்டல் முறையில் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது
காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையின் சார்பில் இரண்டு அன்னவுன்ஸ்மென்ட் குரூப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொன்றிலும் 2000 நபர்களைக் கொண்டு அதாவது நான்காயிரம் நபர்களுக்கு உடனடியாக தகவல்கள் அனுப்பப்படுகிறது.
அது மட்டுமல்லாது whatsapp சேனல் மூலம் கிட்டத்தட்ட 2500 நபர்களுக்கு காரைக்கால் மாவட்ட தகவல்கள் உடனுக்குடன் செல்கின்றது. மேலும் பல்வேறு காரைக்கால் மாவட்ட whatsapp குரூப்புகளில் காரைக்கால் மாவட்ட செய்திகளை கொண்டு சேர்க்கப்படுகிறது.
இதன் மூலம் காரைக்கால் மாவட்ட செய்திகள் பதிவு செய்யப்பட்டவுடன் கிட்டத்தட்ட 10,000 பொதுமக்கள் செய்திகளை பார்க்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும், காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத்துறையில் கிட்டத்தட்ட 70% ஊழியர்கள் காலியாக இருந்தாலும் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவிப்பது, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காரைக்கால் வரும் அரசு விருந்தினர்களை உபசரித்தல், குடியரசு தின விழா, சுதந்திர தின விழா மற்றும் விடுதலை நாள் விழா போன்றவை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பல்வேறு தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
அவரின் பணியானது அரசுக்கும் மக்களுக்கு இடையே பாலமாக அமைந்து, பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மூலம் அனைத்து செய்திகளும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில், கொரோனா காலகட்டத்தில், காரைக்கால் மாவட்ட அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து, மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் கொரோனா தொற்று காரைக்கால் மாவட்டத்தில் மிகவும் குறைய காரணமாக செயல்பட்டவர்.
இவர் கொரோனா காலகட்டத்தில், இவரின் மனைவி மற்றும் மகளுக்கு புதுச்சேரியில் கொரோனா தொற்று ஏற்பட்ட போதிலும், கடவுள் மீது பாரத்தைப் போட்டு, புதுச்சேரிக்கு செல்லாமல் காரைக்கால் மாவட்ட மக்களுக்காக காரைக்காலில் விழிப்புணர்வில் அதிதீவிரமாக செயல்பட்டவர்.
அரசாங்க செய்திகள், மக்கள் செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை மக்களிடையே முறையாகக் கொண்டு சென்றவர். இவரின் சேவை பாராட்டி பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி உள்ளது.
காரைக்குரல் பத்திரிக்கை நிறுவனம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், மதுரையில் உள்ள தேடல் அறக்கட்டளை இவருக்கு சிறந்த சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இப்படி பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி உள்ளது.
மேலும் இவரைப் பாராட்டி பல்வேறு குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழாக்களின் போது காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் பெருமக்களால் பல்வேறு பாராட்டு பத்திரங்களை பெற்றுள்ளார்.
இவர் அவரின் குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவர். மேலும் இவரின் தந்தை எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றாலும், அந்தக் குறையை போக்க இவர் ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் துறையில் மதுரை காமராஜர் பல்கலைகத்தின் மூலம் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றார்
இவர் காவல்துறையில் பணியில் இருந்த போது அரசின் அனுமதி உடன் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாலை நேர சட்ட கல்லூரி வகுப்பில் சேர்ந்து LL.B. (வழக்கறிஞர்க்கான) பட்டம் பெற்றார். இவர் படித்தது அனைத்துமே அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர், அக்குபஞ்சர் என்ற சைனா வைத்திய முறையில் அதிகமாக ஈடுபாடு கொண்டதால் இவர் M.Sc. (Acupuncture) மேல்பட்ட படிப்பு தமிழ்நாடு பிசியல் எஜுகேஷன் பல்கலைக் கழகத்தின் மூலம் முதல் வகுப்பு மற்றும் சிறப்பு நிலையில் தேர்ச்சி பெற்றவர்.
தற்போது PCS பதவி உயர்வுக்கு தகுதியானவராகவும் உள்ளார்.
அவரின் வாழ்க்கையில் காவல்துறையின் காவலராக பணியில் சேர்ந்து தற்போது அரசு இதழ் பதிவு பெற்ற உதவி இயக்குனராக புதுச்சேரி அரசில் பணிபுரிந்துள்ளார்.
இவருக்கு அறம் விருதுகள் 2025. விழாவில் இவருக்கு சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.






