
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வாலாஜா தாலுகா 21வது மாநாடு
சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை விழிப்புடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க தாலுகா மாநாட்டில் தீர்மானம்
ராணிப்பேட்டை, ஏனைய மாவட்டங்களில் போல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வாலாஜா தாலுகா 21வது மாநாடு
தாலுகா தலைவர் கே. ஏழுமலை தலைமையில் இரத்தினகிரியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தாலுகா குழு உறுப்பினர் எச். பிரவீன்ராஜ் வரவேற்று பேசினார். தாலுகா குழு உறுப்பினர்கள் கே. உமாபதி அஞ்சலி, செயலாளர் எம். ரமேஷ் வேலை அறிக்கை முன்வைத்தனர். விவசாய சங்க மாநில பொருளாளர் சி. பெருமாள் துவக்கி வைத்து பேசினார். முன்னதாக து. தலைவர் எம். தனபால் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணிகண்டன், வி.ச மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, செயலாளர் எல்சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே. ஜெயசங்கர், சீனி. ஜெகநாதன், ஆற்காடு தலைவர் ஏ.எம். சம்பத்பிள்ளை, செயலாளர் ஆர். மோகன் ராஜ், பொருளாளர் எ. குமார், சி. தாமோதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநாடு நிறைவு செய்து மாநில குழு உறுப்பினர் மாவட்ட செயலாளர் எல்சி. மணி பேசினார். இறுதியாக தாலுகா குழு உறுப்பினர் இ. மணிமாறன் நன்றி கூறி முடித்து வைத்தார்.
புதிய நிர்வாகிகள்
தலைவராக கே. ஏழுமலை, செயலாளர் பி. சேகர், பொருளாளராக கே. உமாபதி உள்ளிட்ட 13 பேர் கொண்ட வாலாஜா தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது.
தீர்மானங்கள்
இராணிப்பேட்டை சிப்காட் டிசிசி கொட்டப்பட்டுள்ள 2.25 டன் அபாயகரமான குரோமிய கழிவுகளை அகற்ற வேண்டும். நவ்லாக் பகுதியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். வாலாஜா தாலுகா கீழ்மின்னல் சர்வே எண் 145 ல் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் 108 வீடுகளுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் விரைந்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை விழிப்புடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களை போல இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும். காஞ்சனகிரி மலையை ஏலகிரி மலை போல சுற்றுலா தளம் ஆக்கி அரசு கோடை விழா நடத்த வேண்டும். புதுப்பாடி அணை புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். தோல் ரசாயன கழிவுகளால் பாலாறு நிலம் நீர் காற்று மாசடைவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






