March 2, 2026
காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை

காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை

வாடிப்பட்டி,செப்.1-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நீரேத்தான் வளையல்கார தெருவில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த 48 நாட்களும் தினந்தோறும் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 48 வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு பால் தயிர் நெய் இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு யாக சாலை பூஜை நடந்தது. இதில்ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *