
கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்புச் சங்கம் கோவை
கோவை
கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்கம் பதிவு எண்.008/2003
நாங்கள் அதன் உறுப்பினர்கள் என்ற முறையில் தற்போதய வழக்கறிஞர்களுக்கு, அதன்பொறுப்பாளர் வழியாக தெரிவிப்பது என்னவென்றால் , (1)இப்பவும் நம் வழக்கின் மேல்முறையீட்டில் உள்ள(Prayer)படி வழக்கின் போக்கினை திசை மாற்றாமல் “கலைமகள் சபா” விதிகளின்படி(நாங்கள் ஏற்று பணம் செலுத்தியது)நம் சபா சொத்தை நமக்கே பிரித்து பிரித்து தர வேண்டும்.
(2) 1984-1996 முடிய உள்ள உறுப்பினர்களில் தற்போது உரிய ஆதாரங்களுடன் உயிரோடு இருப்பவர்கள் அதிகபட்சமாக சுமார் 75,000(எழுபத்தைந்தாயிரம்) எண்ணிக்கை கொண்டவர்கள் மட்டுமே சபா விதிப்படி சொத்தை மீள பெறக்கூடிய நிலையில் “உயிருடன்” இருப்பார்கள். முதலில் அவர்களுக்காவது/வாரிசுகளுக்காவது சபா விதிகளின்படி பங்கு அடிப்படையில் அனைத்தையும் வழங்க முன் வர வேண்டும்.
(3)கடந்த 17-08-2025 ந்தேதிய நாளிதழில் நம் வழக்கறிஞர்கள் சபா சொத்துக்களை “கண்டறிய முடியவில்லை” என தெரிவித்திருப்பது விந்தையாக உள்ளதுடன், உறுப்பினர்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது. (நிலங்களை, கட்டிடங்களை பாய் போல சுருட்டி எடுத்து கொள்ள முடியாது என்பதுதான் திரு.ஜான் அவர்களது தாரக மந்திரம். அதை நினைவு படுத்துகிறேன்)
( சொத்துக்கள் எல்லாம் அரசியல்வாதிகள்,பண முதலைகள் மற்றும் நம் முன்னாள் மேலாளர்களின் பராமரிப்பிலும் உள்ளதாக தெரியவருகிறது)
(4)வருவாய்த்துறை துறை கூடுதல் செயலாளர் திருமதி,பி.அமுதா IAS., அவர்களது நேர்மை, பணித்திறன், நாடு போற்றுவதாகும்.
அவர்களது முழுமையான ஆதரவு நம் வழக்கிற்கு கிடைக்க அரசு அனுமதித்தால் நமது நீண்டகால எதிர்பார்ப்பு வரைவில் நிறைவேறும்.
(5)தனிஅலுவலர்/பதிவுத்துறை தலைவர் அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து, பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்து,அப்பாவி உறுப்பினர்களுக்கு ரூ.2000/-வீதம் கொடுத்தது நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்டதாகும்.நம் வழக்கறிஞர்கள் அதற்கான “Condomed of Court” நடவடிக்கை மேற்கொண்டால் தான் கடமை தவறிய சம்பந்தபட்ட அதிகாரியின் முறைகேடான செயல்கள் நிறுத்தப்படும்.
(6)பதிவுத்துறை தலைவர்,அனைத்து
சபா சொத்து பத்திரங்களையும் அந்தந்த 33-மாவட்ட ஆட்சியர்களிடமும் வழங்கிய விபரத்தையும்,ஆட்சியர்கள் 68 சர்வேயர்கள்,இதர பணியாளர்களை கொண்டு சொத்துக்களை அளவீடு செய்து ஆங்காங்கே “கலைமகள் சபா”வுக்கு சொந்தமான நிலம்/கட்டிடம் என போர்டுகள் வைப்பதுடன்,ஆங்காங்கே இருக்கும் ஆக்கிமிப்பாளரின் விபரங்களை புள்ளிவிபரத்துடன் மா/மிகு.உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆவண செய்ய வேண்டும்.
(7) நமது,உயர்நீதி மன்றத்தின் நம்பிக்கை இழந்த தனி அலுவலர்/பதிவுத்துறை தலைவர் அவர்களிடமுள்ள பொறுப்பிலிருந்து அவரை நீக்கி, பொறுப்பை மீள பெற்று, ஓய்வு பெற்ற மா/மிகு.உயர்நீதிமன்ற நீதிஅரசர் தலைமையில், நேர்மைக்கு பெயர் பெற்ற IAS., IPS., ஆபீசர்களுக்கு முழு நேர பணியாக பொறுப்பை வழங்கி, நம் சபா உறுப்பினர்களின் படித்த வாரிசுகளுக்கு ,படிப்புக்கு தகுந்த பணிகளை சபா அலுவலகத்தில் வழங்கி, அனைத்து வழக்கு சம்பந்தபட்ட பணிகளையும் சிறப்பாக முடிக்க நம் வழக்கறிஞர்கள் ஆவண செய்ய நம் பொறுப்பாளர்கள் தூண்டுதல் செய்திட அனைத்து உறுப்பினர்கள் சார்பாக இதன் மூலம் வேண்டிக்கொள்கிறோம். செய்வீர்களா? நன்றி.






