March 2, 2026
பழனி அருகே ஆயக்குடியில் விசிக கவுன்சிலர் தலைமையில் பூமி பூஜை.

பழனி அருகே ஆயக்குடியில் விசிக கவுன்சிலர் தலைமையில் பூமி பூஜை.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த புது ஆயக்குடி 16 வது வார்டு பகுதி பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து தெற்கு தலைவாசல் வரை 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நிகழ்ச்சி வார்டு விசிக கவுன்சிலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றன..

தொடர்ந்து இந்த பாதையில் கொய்யா,மாங்காய்,உள்ளிட்ட பழங்கள் அதிகமாக கொண்டு வருவதால் இந்த சாலை மிகவும் மோசமடைந்து காணப்பட்டு வருகின்றனர்.இந்த சாலையில் வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக 16 வது வார்டு மெயின் தார் சாலையை சீரமைக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர் சரஸ்வதி பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமாரிடம் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து பூமி பூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து 16வது வார்டுக்கு புதிய தார் சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்த பழனி சட்டமன்ற உறுப்பினருக்கு கவுன்சிலர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்..

மேலும் இந்நிகழ்வில் விசிக இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் வாஞ்சிநாதன் ராஜசேகர், கன்சிராம், சுப்பிரமணி, பிரதா, கவிதாமணி, ஆறுமுகம், சின்னத்துரை, ஜேசிபி ராமர், மாயவன், பாண்டிவளவன், ஜான்சி ராணி, இல.மாதவன், பரந்தாமன், அருளானந்தம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பூமி பூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *