
சிவகங்கை மாவட்டம் ஶ்ரீபிரத்யங்கிராதேவி சர்வசக்தி பீடத்தில் ஆவணி மாத அமாவாசை யாகம் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், K.சொக்கநாதபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீபிரத்யங்கிராதேவி சர்வசக்தி பீடத்தில், ஆவணி மாத அமாவாசை (22-08-2025, வெள்ளிக்கிழமை) யாகம் மற்றும் அன்னதானம் ஆன்மிகச் சிறப்புடன் நடைபெற்றது.
இந்த புண்ணிய நாளில் நடைபெற்ற யாகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வீக அருளைப் பெற்றனர். பக்தர்களின் ஆன்மிக முன்னேற்றத்திற்காக நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகள், யாகங்கள், ஹோமங்கள் அனைவருக்கும் ஒரு ஆனந்த பூரண அனுபவத்தை வழங்கின.
நிகழ்ச்சியின் சிறப்பாக, அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆன்மீக நிகழ்வு பக்தர்களின் உற்சாக பங்களிப்பால், விழா ஒரு ஆன்மிகத் திருவிழாவாக அமைய, அனைவருக்கும் மறக்க முடியாத புண்ணிய அனுபவமாக திகழ்ந்தது.
வரவிருக்கும் தினங்களில் மேலும் பல ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.






