March 3, 2026
ஆடித் திருவிழா: அழகர் கோவில் தேரோட்டம்

ஆடித் திருவிழா: அழகர் கோவில் தேரோட்டம்

அலங்காநல்லூர்:

ஆடித் திருவிழா: அலங்காநல்லூர். மதுரை மாவட்டம், அழகர்கோவில், கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடி பெருந்திருவிழாவாகும்.

இந்த விழா கடந்த 1 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினமும், அன்னம், சிம்மம், அனுமார், கருட, சேஷ, யானை, உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஆடி பெருந்திருவிழாவின் முக்கியநாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்ட திருவிழா நேற்று நடைபெற்றது.

இதில்காலையில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு, கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவியர்களுடன், எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8.33 மணிக்கு அலங்கரிக்கபட்ட திருத்தேரின் வடங்களைபக்தர்கள் வடம் பிடித்து , ஆயிரக்கணக்கானவர்கள் கோவிந்தா, கோவிந்தா, என கோஷமிட்டு இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். பகல் 12.05 மணிக்கு தேர் நிலைக்கு நின்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சந்தனக் குடங்கள் எடுத்து வந்து 18ம் படி கருப்பணசாமி கோவிலில் சாத்துபடி செய்து தரிசனம் செய்தனர். பல்வேறு மாவட்டங்கள்ளில் இருந்து வந்து பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி பக்தர்கள் அன்னதானம் வழங்கினர். கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் கோட்டைவாசல் முன்பாக இருந்துசுமார் 2 கிலோ மீட்டர் முன்னே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பக்தர்கள் மட்டும் நடந்து செல்ல அனுமதிக்கபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டி ஐ ஜி அபினேஷ்பிரனவ், மாவட்டசூப்பிரண்டுஅரவிந்த் தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகம் என்பதால் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் ,குடிதண்ணிர், வசதிஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து ஆடி பௌர்ணமி நாளான நேற்று
மாலை பதினெட்டாம் படி திருநிலை கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜைகள் செய்து சந்தனம் சாத்துப்படியாவது நடைபெற்றது..

தொடர்ந்து இரவில் புஷ்ப பல்லக்கில் சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளினார். தொடர்ந்து இன்று இரவில் புஷ்ப சப்பரம், நாளை 11ந் தேதி உற்சவ சாந்தி நடைபெறும். இத்துடன் இந்த ஆடி பெருந் திருவிழா நிறைவு பெறுகிறது. பக்தர்கள் அழகர்மலையில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படை வீடு சோலைமலை முருகன், கள்ளழகர் பெருமாள், மற்றும் பதினெட்டாம் படி கருப்பணசுவாமி, ஆகிய கோவில்களில் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாகஆடி தோரோட்ட திருவிழாவில்அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், மாவட்ட கலெக்டர் பிரவின்குமார்.துணை ஆணையர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள்,அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் உள்துறை அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தேரோட்ட திருவிழாவில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *