March 2, 2026
இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் ரமேஷ் பாபுஜி தலைமையில் ரிதன்யா தற்கொலைக்கான நீதி கோரி ஆர்ப்பாட்டம்

இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் ரமேஷ் பாபுஜி தலைமையில் ரிதன்யா தற்கொலைக்கான நீதி கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை,ஆகஸ்ட்,12
இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் இந்து திராவிட கட்சியின் தேசிய தலைவர் கோ.ரமேஷ்பாபுஜி தலைமையில் சென்னையில் உள்ள தாம்பரத்தில் ரிதன்யா மரணம் தொடர்பாக நீதி கோரி பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ரிதன்யா தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகள் கவின்குமார், சித்ராதேவி, ஈஸ்வரமூர்த்தி ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் உடனடியாக சிறையில் அடைத்து, வாழ்நாள் முழுவதும் சாகும் வரை சிறைத் தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக CBCID விசாரணை அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் மூலம் இந்த கோரிக்கைகள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்துதிராவிடமக்கள் கட்சி மற்றும் இந்துத் திருக்கோயில் பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகிகள், இந்துஇயக்கத் தலைவர்கள் மற்றும் பல்வேறு சமூக அக்கறை கொண்ட அன்பர்கள் கலந்து கொண்டு, நீதிவேண்டும், நீதிவேண்டும் என முழக்கமிட்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டோர், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கினால்தான் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாது என்பதில் ஒருமித்த கருத்தினைப் பதிவு செய்தனர்.இந்த ஆர்ப்பாட்டம் வழியாக, மாநில அரசு மற்றும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கோரிக்கைகள் எடுத்துச் செல்லப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *