
இராமநாதபுரம் தவெக கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
இராமநாதபுரம்:
தமிழக வெற்றிக் கழகத்தின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட மண்டபம் ஒன்றியம் தங்கச்சிமடம் SMA மஹாலில், வரும் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டபம் ஒன்றிய கழக செயலாளர் ரெய்மண்ட் சிறப்பாக மேற்கொண்டார். இரண்டாவது மாநில மாநாட்டின் ஆலோசனை நடைபெற்றது மற்றும் கட்சியின் வளர்ச்சித் திட்டங்களையும் மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என பலர் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
கட்சியின் அடுத்த கட்ட பணிகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம், பொதுமக்களுடன் தொடர்பு வலுப்படுத்துதல், மற்றும் மாநில மாநாட்டிற்கான தயாரிப்புகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.
கட்சியின் ஒற்றுமை, செயல்திறன், மற்றும் மக்கள் நல சேவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மலர்விழி ஜெயபாலா, “வரவிருக்கும் மாநில மாநாட்டை வரலாற்றில் சிறப்பாகச் செய்வது அனைவரின் பொறுப்பாகும்” எனக் கூறினார்.
நிகழ்ச்சி இறுதியில், கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த பணிகளை மேலும் வலுப்படுத்தவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.






