March 5, 2026
*ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் கணக்கன்பட்டி, கண்டனூர் சுவாமிகள் சித்தர்களின் தந்தை என போற்றப்படும் ரிஷி, கலியுகத்தில் மக்கள் வேண்டும் வறங்களை வழங்கும் வள்ளல்*

*ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் கணக்கன்பட்டி, கண்டனூர் சுவாமிகள் சித்தர்களின் தந்தை என போற்றப்படும் ரிஷி, கலியுகத்தில் மக்கள் வேண்டும் வறங்களை வழங்கும் வள்ளல்*

தான் சமாதி அடையபோவதை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டு தனக்கான சமாதி கோவிலை தாமே முன்னின்று சமாதி கோவிலை கட்டிக்கொண்டு 25.1.2017 அன்று தை அமாவாசை அன்று மகா சமாதி அடைந்தார்கள்

இன்றளவும் பல சித்தர்கள் ரூபமாகவும் அரூபமாகவும் தரிசனம் செய்கின்றார்கள்

சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் அவர்களது வயதை எவராலும் கணிக்க முடியவில்லை அவர் சமாதி அடையும் போது அவருக்கு வயது 180 க்கும் மேல் இருக்கும் என்று அவர்களது சீடர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்

சுவாமிகளை நான் நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவன் சுவாமிகளுடன் 2 ஆண்டுகள் வாழ்ந்த பாக்கியம் பெற்றவன் நான்

சுவாமிகள் தமது 13 வயதில் துறவு மேற்க்கொண்டு மும்மை,ஹைதராபாத் பகுதிகளில் இருந்துள்ளார்கள் பிறகு தமது தவ வாழ்வை துவங்க இமயமலை நோக்கி பயணித்து இமயமலையில் சில ஆண்டுகள் தவமியற்றி மீண்டும் மஹாராஷ்ட்ரா மாநிலம் வந்துள்ளார் அப்போது அவர்களுக்கு நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர் சத்குரு #ஷீரடிசாயிபாபா அவர்கள் , இருவரும் இளமை பருவத்தில் ஒன்றாக ஒரே இடத்தில் வசித்துள்ளார்கள் பிறகு சுவாமிகள் மீண்டும் தனது தவவாழ்வை மேற்க்கொள்ள யாத்திரையை துவங்கி காசி,அலகாபாத்,திருவேணிசங்கமம் போன்ற பகுதிகளில் தங்கி வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்

பிறகு அங்கிருந்து நமது தென்னாட்டை நோக்கி பயணித்து பழனி அருகே உள்ள #கணக்கன்பட்டியை அடைந்து அங்கே பல அற்புதங்களை செய்து அந்த ஊரிலே ஒரு மிகப்பெரிய #காளி_கோவிலை கட்டி ஊர்மக்களின் வழிபாட்டுக்கு வழங்கியுள்ளார்கள் பிறகு அங்கிருந்து சென்று வத்தலகுண்டு ல் சில காலம் கொடைக்காணலில் சில காலம் பெருமாள் மலையில் சில காலம் தங்கி தன்னை தேடி வரும் மக்களின் கர்மவினைகளை போக்கியுள்ளார்கள்

பிறகு அங்கிருந்து புரவிப்பாளையத்தில் வாழ்ந்த #கோடி_சுவாமிகளுடன் 2 ஆண்டுகள் தங்கியுள்ளார்கள் சுவாமிகள் அங்கே தங்கியிருந்த போது அவர் பயன்படுத்திய கட்டில் இன்றும் அந்த ஜமீன் வீட்டில் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது

பிறகு அங்கிருந்து கல்லல்,மீமிசல்,திருச்சி இவற்றில் எல்லாம் சில ஆண்டுகள் தங்கி மக்களின் கர்மவினையை போக்கியுள்ளார்கள் பின்பு திருவண்ணாமலையை அடைந்துள்ளார்கள் அப்போது அவர்களை ஒரு VRS பெற்ற நீதி மன்ற வழக்கறிஞர் ஒருவர் சந்தித்துள்ளார் அவருக்கு ஞான உபதேசம் வழங்கி திருவண்ணாமலையிலே நீ இருந்துகொள் என்று கூறி சுவாமிகள் அங்கிருந்து ஆந்திரா புறப்பட்டார் சுவாமிகளால் ஞான உபதேசம் பெற்றவரே இன்று #யோகிராம்சூரத்குமார் என்ற #விசிறிசாமி என்று பக்தர்களால் அழைக்கப்படுபவர்

ஆந்திராவில் இருந்து பிறகு மீண்டும் தென்னாடு தமிழகம் நோக்கி பயணிக்கின்றார்கள் காரைக்குடி அருகே கண்டனூர் எனும் கிராமத்தில் முன்னால் மத்திய நிதி அமைச்சர் #பசிதம்பரம் அவர்களது குலதெய்வ கோவிலான #வைகைகரைகருப்பர் கோவிலில் 7 ஆண்டுகள் தங்கி மக்களின் கர்மவினையை போக்குகின்றார்கள் பிறகு பல சித்தர்களின் அழைப்பையேற்று அவர்களுக்கு தரிசனம் வழங்கிட செல்கிறார்கள் அவர்களில் நாங்கள் அறிந்தவரை பெயர்களை குறிப்பிடுகிறோம் தஞ்சாவூர் அருகே #ராஜகிரி சுவாமிகள், இடையமேலூர் #மாயாண்டிசித்தர், காரைக்குடி #எச்சில்பொறுக்கிஆறுமுகசுவாமிகள் ஆகியோர்,

பின்பு மீண்டும் பழனி அருகே #கணக்கன்பட்டியை அடைகிறார் சுவாமிகள் சுவாமிகளை கண்டதும் மக்கள் ஆனந்தத்தில் திலைக்கின்றார்கள் நம்ம சாமி மீண்டும் நம்மிடமே வந்துவிட்டார் என்று சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விடுகின்றனர் சுவாமிகள் கணக்கப்பட்டியில் அவர் ஏற்க்கனவே கட்டிய #காளிகோவிலை புணரமைத்து சுற்று சுவர் எழுப்பி கும்பாபிஷேகம் செய்ய ஏற்ப்பாடுகளை செய்தார்கள் அப்போது அதே ஊரில் காளிமுத்து என்ற தாழ்த்தபட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் சுவாமிகளுக்கு பணிவிடை செய்ய வந்தார் சுவாமிகளுடனே தங்கியிருந்தார் அந்த கால கட்டத்தில் அங்கே ஜாதி வெறி தலை விறித்து ஆடிய காலம் தாழ்த்தபட்ட சமுதாய மக்கள் ஒடுக்கப்பட்ட கால கட்டம், அவ்வப்போது சுவாமிகள் காளிமுத்துவை அழைத்துகொண்டு பழனி மலையை கிரிவம் வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் அப்போது அங்கே சுவாமிகளை தரிசித்த ஒரு ஞானியை ராஜ யோக மௌனியாக வரம் வழங்கி பழனியம்பதியிலே வாழ வரம் கொடுத்தார்கள் அவரே #பழனிசாக்கடைசித்தர் ஆவார்

கணக்கன்பட்டியில் ஆலயப்பணி விறுவிறப்பாக நடந்துகொண்டிருந்தது அந்த காலகட்டத்தில் அங்கே ஊர் கட்டுப்பாடு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் கிராமத்துக் கோவிலுக்குல் அனுமதிப்பதில்லை , அப்போது ஆலயப்பணிகளை பார்வையிட சுவாமிகள் சென்றுள்ளார் உடன் அந்த காளிமுத்து எனும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் கோவில் உள்ளே வந்ததை கண்ட ஊர்மக்கள் காளிமுத்துவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் அப்போது சுவாமிகள் குறுக்கிட்டு அவனை யாரும் ஒன்றும் சொல்க்கூடாது அவன் கீழ்சாதி என்பதற்க்காக அவனை கேவலப்படுத்த நினைக்கின்றீர்கள் இப்படி நீங்கள் நடந்துகொண்டால் அவனை இந்த உலகமே கையெடுத்து கும்பிடும் அளவுக்கு உயர்த்திவிடுவேன் என்று எச்சரித்துள்ளார், ஆலயப்பணியும் நிறைவுபெற்றது கும்பாபிஷேகத்திற்கான வேலை நடைபெற்றுள்ளது விடிந்தால் காலையில் குடுமுழுக்கு அன்று இரவு அந்த ஊரில் சிலர் காளிமுத்துவை சாமி பெரியாளாக ஆக்கி விடுவார் என்று எண்ணி கொலை செய்ய திட்டமிட்டு அடித்து கொலை செய்த பிணம் எறிக்கும் இடத்தில் போட்டுவிட்டு இரவோடு இரவாக ஓடிவிட்டார்கள் சுவாமிகள் நடந்ததை அறிந்து அவ்விடம் விரைந்தார் இறந்து கிடந்த காளிமுத்துவின் உடலை தூக்கி கட்டி அனைத்துள்ளார் இறந்தவர் உயிர் பெற்றார் அப்போதே அவருக்கு அந்த இடத்திலே ஞான உபதேசம் செய்து நீ சில காலம் சில இடங்களை குறிப்பிட்டு தவத்தை மேற்க்கொண்டு இந்த ஊரை காத்துக்கொள் என்று கூறி சுவாமிகள் யாரிடமும் சொல்லாமல் இமயமலை நோக்கி புறப்பட்டார்கள் (அவரே இன்று #கணக்கன்பட்டி #அழுக்குமூட்டைசுவாமிகள் என்று பக்தர்கள் அழைக்கின்றார்கள்), பிறகு குடமுழுக்கு முடிந்ததும் கிராமத்தார்கள் சுவாகளை பல ஊர்களிலும் தேடி காணவில்லை

சுவாமிகள் 18 ஆண்டு இமயமலையிலே தங்கிவிட்டார் பின்பு மீண்டும் தமிழக்த்திற்க்கு காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் வருகிறார் அங்கே மீண்டும் 4 ஆண்டுகள் இருக்கிறார் அப்போது சுவாமிகள் இருப்பதை அறிந்த கணக்கன்பட்டி மக்கள் கண்டனூர் விரைகின்றார்கள் சுவாமிகளை தங்கள் ஊருக்கே அழைக்கின்றார்கள் சுவாமிகள் மீண்டும் கணக்கன்பட்டி செல்கிறார் அங்கே சென்றதும் நான் வந்துவிட்டேன் இனி அழுக்குமூட்டைக்கு வேலை குறைந்தது அவன் சென்று விடுவான் என்று கூறியுள்ளார் சுவாமிகள் கூறியதுபோலவே சில மாதங்களில் அழுக்குமூட்டை சாமி சமாதி அடைகின்றார் அப்போது அவர் உடலை எங்கு சமாதி வைப்பது என்று அழுக்குமூட்டை சாமியின் பக்தர்களிடமௌ பெறும் சண்டையே வந்து 3 நாட்கள் ஆகியும் சமாதியில் வைக்கமுடியவில்லை அப்போது கணக்கன்பட்டியை சேர்ந்த மோகன் என்பவரை அழைத்து உன்னுடைய சோளதோட்டத்தில் அவனுக்கு சமாதி வைக்க இடம் கொடுத்து நியே அந்த சமாதியை பராமரித்து வா என்று சுவாமிகள் கூறியதும் மறுப்பு தெரிவிக்காமல் அதன்படியே மக்கள் செய்தார்கள் பின் சிலமாதம் கலித்து நான் செல்கின்றேன் என்று கூறி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேந்த திரு #இராமலிங்கம் அவர்களுடன் திருப்பத்தூர் வந்தடைந்தார்கள் சுவாமிகள் தனக்காக மண்டபம் அமைக்கபோவதாகவும் அதற்க்கு இடம் தேவைப்படுவதாகவும் திரு ராமலிங்கம் அவர்களிடம் சுவாமிகள் கூறியதும் மதகுபட்டியில் உள்ள தனது 10 ஏக்கர் தோட்டத்தை சுவாமிகளுக்கு காணிக்கையாக வழங்கினார் மண்டபவேலை துவங்கி நடைபெற்றது திரு.ராமலிங்கம் அவர்களை அழைத்து நான் அமைக்கும் மண்டபமே எனது ஆசிரமம் எனறு கூறி ஆசிரமத்திற்க்கு பெயர் வைக்கவேண்டும் என்று சொல்லி முதல் முறையாக அப்பொதுதான் தனது பெயரை இந்த வெளிஉலகிற்க்கு அறிவிக்கிறார்கள் சுவாமிகள் #ஓம்ஸ்ரீபிரம்மரிஷிமகேந்திரகிரிஆசிரமம் என்று பெயர் வை என்று கூறி, தனது பெயர் மகேந்திரவர்மன் என்றும் தனது பூர்வீகம் திருவிதாங்கூர் சமஸ்த்தானா ஜமீன் மன்னர் வகையரா என்றும் முதல் முறையாக கூறினார் அதுவரை சுவாமிகளை பக்தர்கள் சுவாமிகள் எந்த ஊரில் தங்கியிருப்பாரே அந்த ஊரின் பெயரை சேர்த்து சுவாமிகள் என்று அழைப்பார்கள் , பிறகு தான் சமாதி அடையபோகிறேன் தை அமாவாசை அன்று என்று கூறி தை அமாவாசை அன்று அந்த மண்டபத்திலே என்னை சமாதியில் வைத்துவிடுங்கள் என்றுகூறி சுவாமிகள் சொன்னதுபோலவே 26.1.2017 அன்று சுவாமிகள் மகா சமாதி அடைந்தார்கள் பிறகு திரு ராமலிங்கம் அவர்கள் தலைமையில் சுவாமிகளின் பக்தர்களின் முன்னிலையில் சுவாமிகள் சமாதியில் வைக்கப்பட்டார்கள்,

தினமும் சுவாமிகளுக்கு 5 கால பூஜை நடைபெறுகிறது தினமும் ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது அமாவாசை பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது சுவாமிகள் இன்றளவும் எங்களை வழிநடத்தி கொண்டு அவரை நாடி வரும் நல் உள்ளம் கொண்ட மக்களின் கண்ணீரை துடைக்கும் பகவானாக மதகுபட்டி எனும் ஊரில் வீற்றிருக்கின்றார்ள்

சுவாமிகளின் ஆசிரமம் இருக்குமிடம்

ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் ஆசிரமம்
பாகனேரி சாலை
மதகுபட்டி
சிவகங்கை தாலுகா மாவட்டம்
மேலும் தகவல்களுக்கு
9443350044
9788997431

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *