
உயர்வுகள் மேலே.
மேலதன் மேலே மேலதன் மேலே மேடதன் மேலே மேய்வன மேலே
காடதன் மேலே கொடி அதன் மேலே பூவதன் மேலே மொய்ப்பன மேலே
ஆசைகள் மேலே அடைவன மேலே உடுப்பன மேலே உயிரதன் மேலே
பாயதன் மேலே படுகைகள் மேலே பாய்வன மேலே ஆறுகள் மேலே
ஊரதன் மேலே உறவுகள் மேலே உயர்ந்தன மேலே படர்வன மேலே
காயதன் மேலே கனிவன மேலே கசப்பன மேலே மருந்ததன் மேலே
வார்த்தைகள் மேலே வருவன மேலே வழி தவறாக தொல்லைகள் மேலே
சுழல்வன மேலே சுகப்படல் மேலே சொல்வன மேலே நடமிடல் மேலே
படுப்பன மேலே பயில்வன மேலே பண்பதன் மேலே இருத்தலும் மேலே..
அது அதன் சுமைகள் அது அதன் மேலே அடிப்பும் துவைப்பும் வெளுப்பதன் மேலே
ஆரத் தழுவும் கையதன் மேலே அள்ளி முடிக்கும் செயல் அதன் மேலே..
வாரி சுருட்டும் வகையதன் மேலே வழங்கும் கடலுக்கு அலை அதன் மேலே..
மேலே.. மேலே மென்மைகள் மேலே மிதிப்பார் பார்த்து எதிர்ப்பதும் மேலே..
காய்க்கும் கனிக்கும் உறவதன் மேலே கணிப்பார் பலருக்கு மகிழ்வதன் மேலே..
வழங்கும் போழ்தில் பொருள் அதன் மேலே வாசிக்கும் போழ்தில் கையதன் மேலே
உருளும் போதில் உடல் அதன்மேலே உயர்வுக்கும் தாழ்வுக்கும் பணிவதன் மேலே..
தனிக்கும் உறக்கத்தில் ஓய்வுகள் மேலே தாங்கும் மாந்தர்க்கு உயர்வுகள் மேலே!.
பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.