
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில்அன்னை சோனியா காந்தி அவர்களின் 79-வது பிறந்த நாளை முன்னிட்டு கோயில் களில் சிறப்பு பிரார்த்தனைகள் - வாக்கு திருட்டு குறித்து விழிப்புணர்வு பேரணி - மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல் நிகழ்ச்சி..
ஸ்ரீ பெரும்புதூர் டிசம்பர் 9:-
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்னை சோனியா காந்தி அவர்களின் 79 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டி காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு வட்டார தலைவர் புஷ்பராஜ் முருகேசன் முன்னிலையில் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர்,

இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் மணி குண்டு அருகே மாநிலத் துணைத் தலைவர் பூந்தூர் பாஸ்கர் தனிமையில் கேக் வெட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்டத் தலைவர் தங்கராஜ் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தலைவர் அமாவாசை வட்டாரத் தலைவர் ராஜீவ் காந்தி மாவட்ட துணைத் தலைவர் கோட்டூர் ராகவன் கிழக்கு வட்டார தலைவர் அற்புதராஜ் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் ஜோதி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஸ்ரீதர் மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி மற்றும் நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.






