
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில மையம், மமாவட்ட செயற்குழுவின் முன்னெடுத்த முடிவுகளின் படி மடத்துக்குளம் வட்டக்கிளை உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் என்.சிவகுமார் தலைமை வகித்தார். இந்த போராட்டமானது அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டன. இதேபோல மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை , மருத்துவத்துறை , வேளாண்மைத்துறை , தோட்டக்கலைத்துறை , கல்வி வளர்ச்சித்துறை என அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு ஆராப்பாட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற போராட்டத்தில் வட்டக்கிளை செயலாளர் அ.பாலு வாழ்த்துரை கூறினார். அப்போது, தொகுப்பூதிய நியமனங்களை அரசுத் துறையில் செய்ய வேண்டாம் எனவும், மதிப்பூதியம் , அவுட்சோர்சிங் ஒப்பந்த நியமன முறையில் கொத்தடிமை முறைகளை அனுமதிக்க இயலாது முடியாது என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
நிறைவாக மாவட்ட பொருளாளர் எஸ்.முருகசாமி நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் எஸ்.அபிராமி வட்டக்கிளை இணைச்செயலாளர் நன்றி உரையாற்றினார். காலை 10 மணிக்கு துவங்கிய இப்போராட்டமானது மாலை 6 மணிவரை நடைபெற்றது.