March 2, 2026
பென்னலூரில் - ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பஜனை கோயில் கும்பாபிஷேக திருவிழா..

பென்னலூரில் - ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பஜனை கோயில் கும்பாபிஷேக திருவிழா..

ஸ்ரீ பெரும்புதூர் டிசம்பர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பென்னலூர் எம்ஜிஆர் தெருவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டஸ்ரீ வெங்கடேச பெருமாள் பஜனை கோயில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.

இக்கோயில் கடந்த 13 வருட காலமாக கட்ட முடியாமல் பல தடைகளை எதிர் கொண்டு தற்போது சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி சிறப்பாக கட்டி முடித்துள்ளனர்.

துவக்கமாக தீக்குண்ட யாகம் வளர்க்கப்பட்டு பிறகு அங்குள்ள கலசநீர் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கோயில் கருவறைக்கு உள்ளே வைக்கப்பட்டிருந்த கோகுலத்தின் கண்ணனாகிய பெருமாளின் திருவுருவப் படம் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இக் கும்பாபிஷேக திருவிழாவில் இந்நாள் முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அருள் பெற்று மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *