
மதுரை அமெரிக்கன் கல்லூரியில், "கைபேசி தொழில் நுட்பம்” பயிற்சிப் பட்டறை :
மதுரை.
ஆக. – 6, மதுரை அமெரிக்கன் கல்லூரியில், “கைபேசி தொழில் நுட்பம்” குறித்த 3 நாள் பயிற்சிப் பட்டறை நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்தும் பயிற்சிப் பட்டறை “கைபேசி தொழில் நுட்பம்” என்ற தலைப்பில் நேற்று 05.08.2025 முதல் நாளை 07.08.2025 வரை மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது.
அறிமுகவிழா வரவேற்பினை முதுகலை சுயநிதிப்பிரிவு இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் கே. ஞானசேகர் அவர்கள் வழங்கினார். இவ்விழாவை அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் ஜெ. பால்ஜெயகர் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் கூறும்போது, இப்பயிற்சிப் பட்டறை மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு, தன்னம்பிக்கையும் ஏற்படும் என்றார். அவரைத் தொடர்ந்து சிறப்புவிருந்தினரை முன்னாள் இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் மைக்கேல் ஃபாரடே அறிவியல் கழக ஒருங்கினைப்பாளர் முனைவர் ஸ்டீபன் ராஜ்குமார் இன்பநாதன் அவர்கள் வரவேற்று சிறப்புச்செய்தார். இப்பயிற்சி பட்டறையின் துறை வல்லுநர் விஜயக்குமார், சன்செல் உரிமையாளர் அவர்கள் தனது துவக்க உரையில் பனிமனை பயிற்சியின் பாடத்திட்ட விவரங்களை வலியுறுத்தினார்.
இப்பயிற்சி, கல்லூரியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைவதோடு, அவர்களின் மனவலிமையும் அதிகரிக்கும் என்றார். மேலும் இம்மூன்று நாட்கள் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநிலமன்ற நிதிஉதவியுடன் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை அமெரிக்கன் கல்லூரியின் நிதிக்காப்பாளரும், பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எம். பியூலா ரூபி கமலம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.