August 8, 2025
மதுரையில் பலத்த மழை: போக்குவரத்து நெரிசல்: போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுக்குமா ?

மதுரையில் பலத்த மழை: போக்குவரத்து நெரிசல்: போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுக்குமா ?

மதுரை.

மதுரை மாநகராட்சி காலனி பகுதியில் தனியார் நிறுவனத்தின் கார் ஷோருமிற்காக சாலை குறுக்கே ரெக்கவரி வாகனம் மூலம் கார் இறக்கியதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு மேலமாக போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மதுரை மாநகராட்சி, காலனி பகுதியில் ரெனால்ட் கார் ஷோரூம் உள்ளது இந்த ஷோரும் முன் பகுதியில் உள்ள சாக்கடையை மதுரை மாநகராட்சி மூலம் சுத்தம் செய்ய மேற்புறம் உள்ள கற்களை அகற்றியுள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதால்,
கற்கள் மூடப்படாமல் உள்ளதால் கார் வேலை செய்ய இன்று ரெக்கவரி வாகனம் மூலம் இறக்கினர்.

இதனால், காலை 10 மணி முதல் 11.30 வரை கடும் வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது.
இதனால், விமான நிலையம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து, இப்பகுதி மக்கள் மாநகராட்சி விரைந்து சாக்கடை சுத்தம் செய்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை கோமதி புரம் சிவகங்கை சாலையில், பலத்த மழையால், மழைநீர் சாலையில் குளம் போல தேங்கியுள்ளது.

மேலும், தேங்கியுள்ள நீர் வழியாகத்தான், தினசரி இருசக்கர,நான்கு சக்கர வாகனங்கள், கருப்பா யூரணி, வரிச்சூர், சிவகங்கைக்கு செல்ல வேண்டியுள்ளது.
இப்பகுதியில் அதிக வேகமாக ஷேர் ஆட்டோக்கள், அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதால், இரு சக்கர வாகனத்தில் அவதியடையும் நிலை உள்ளது.

ஆகவே, மதுரை மாநகராட்சி ஆணையாளர், மேயர் இந்திராணி தனி கவனம் செலுத்தி, சாலையில் தேங்கிய நீரை அகற்ற ஆர்வம் காட்ட, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *