August 7, 2025
அமைச்சர், ஆட்சியர் ஆய்வு:

அமைச்சர், ஆட்சியர் ஆய்வு:

மதுரை:

மதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர்.கே.ஜே.பிரவீன் குமார் இன்று (06.08.2025)
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் நடவு செய்து வளர்க்கப்பட்டு வரும் செடிகளின் ரகங்கள் மற்றும் செடிகளின் விற்பனை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பண்ணையில், தேக்கு, நாவல், நெல்லி, புளி, தேக்கு, மலைவேம்பு, இலுப்பை,மகாகனி, வேங்கை, உள்ளிட்ட 11 ஆயிரம் மரக்கன்றுகளை மண் மற்றும் இயற்கை எருவுடன் பாலிதீன் கவர்களில் நிரப்பி, அவற்றை தினமும் ஏராளமான பெண்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில், உள்ள 27 ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டு, அக்கிராமங்களில் குறுங்காடுகளை ஏற்படுத்துதல், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுமக்கள் வீடுகளில் வளர்க்க மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி
ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் ஆகியவற்றின் கீழ் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த பேருந்து நிலைய வளாகத்தில், விசாலமான பேருந்து நிறுத்துமிடம், உணவகங்கள், கடைகள், அலுவலக அறை, பணியாளர் ஓய்வறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிப்பறைகள், சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி,

மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், வாகைகுளம் மற்றும் பூதகுடி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்காக பனங்காடி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடினார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் உடன் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *