
அமைச்சர் ஆய்வுக் கூட்டம் :
மதுரை :
மதுரை மாவட்டம் வணிகவரித்துறை சார்பில், GST மற்றும்TDS பித்தம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வணிகவரித்துறை சார்பில் GST மற்றும்TDS பித்தம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவிக்கையில்:-
பணி ஒப்பந்தங்கள் வழங்கும் அலுவலகங்களில் இருந்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, அனைத்து ஒப்பந்த பணிகளில் பிடித்தம் செய்யப்பட்ட 2% உஏஊ (TDS) தொகையினை நிலுவையின்றி உடனே GSTR-T நமுனா மூலம் அரசுக்கணக்கில் செலுத்திட, வணிகவரித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால், அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இதுவரை, TDS பிடித்தம் செய்பவராக GSTIN பதிவுச்சான்றிதழ் பெறாத அனைத்து அரசுத்துறை மற்றும் அரசு நிறுவனங்கள் உடனடியாக பதிவுச்சான்றிதழ் பெறவும், பதிவுச்சான்று பெற்றும் மாதாந்திர நமுனாக்கள் தாக்கல் செய்யாதவர்கள் மாதந்தோறும் நமுனாக்கள் தாக்கல் செய்யவும், நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சி அமைப்புகள், வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளின் தொகை குறித்தும் மற்றும் ஒப்பந்தகாரர்கள் குறித்த விபரம் ஆகியவற்றை வணிகவரித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், இணை ஆணையர்.பா.கீதா பாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வானதி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.