
காங்கிரஸில் இருந்தபடியும் தேசாபிமானமாக பேசும் ஒரே ஒரு தலைவர் இவர்தான், கட்சியின் தலைவர் ராகுல் அமெரிக்கா பாகிஸ்தான் சீனாவுக்கு சாதகமாக உளற, இந்த தேசத்துக்காக பேசும் ஒரே காங்கிரஸ்காரர் சசி தரூர்தான்
உண்மையில் டிரம்பரை உலகில் யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை, கனடாவும் மெக்ஸிகோவும் அண்டை நாடுகள் என்றாலும் முடிந்ததை பார் என சொல்லிவிட்டன, ஐரோப்பா ஏறெடுத்தும் பாராமல் நிற்கின்றது
ரஷ்ய புட்டீன் டிரம்பரை எல்.கே.ஜி பையனை போல் பார்த்து கொண்டிருக்கின்றார், சீனாவோ அமெரிக்க வரிக்கு பதில்வரி விதித்து மிரட்டி கொண்டிருக்கின்றது
உண்மையில் ஜெர்மன் தென்கொரியா ஜப்பான் போன்ற நாடுகளும் டிரம்பர்மேல் கடுப்பில்தான் இருக்கின்றன, ஆப்ரிக்கநாடுகளின் நிலை அதுதான்
ஆக உலகில் 90 சதவீத நாடுகள் டிரம்பரை ஒரு தலைவராக கருதவில்லை, பிரான்ஸும் பிரிட்டனும் ஒருபடி மேலே போய் தனி பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் என டிரம்பரை அலறவிடுகின்றன
உண்மையில் உலகில் தனிமைபடுத்தபடுகின்றார் டிரம்பர், அப்படியானவரின் மிரட்டல் இந்தியாவினை ஒன்றும் செய்யாது என்பதே நிஜம், பாகிஸ்தானின் பெட்ரோல் என்ப்தெல்லாம் நடக்கும் காரியம் அல்ல, நடந்தாலும் சல்லிக்கு பிரயோசனமில்லை
இதனால் டிரம்பரின் சவுடால் அவரின் ஸ்பீக்கர்போல் செயல்படும் ராகுலுக்கு வேண்டுமானால் பயன்படலாம் வேறு யாருக்கும் அல்ல
டிரம்பர் ஒரு நாளைக்கு நாலுவிதமாக பேசும் நபர் என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை, அவரை தேசமும் கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது
அவரின் வரிவிதிப்பால் அமெரிக்க மக்களுக்கும் வர்த்தகர்களுக்குமே சிக்கல் அன்றி வேறு யாருக்குமல்ல என்பதால் இந்தியா பெரிதாக பாதிக்கபடாது , இது உலகளாவிய சிக்கல் என்பதால் உலக நாடுகளோடு சேர்ந்து இந்தியா சரிசெய்யும்
இங்கு இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவோம் தேவைபட்டால் சீனாவோடும் கைகோர்ப்போம் எங்கள் நலம் எங்களுக்கு முக்கியம் என வலுத்து நிற்பதுதான் டிரம்பருக்கு அவமானம், ஆனால் அவமானங்களை எல்லாம் பொருட்டாக கருதுபவர் அல்ல அவர், பொருத்து பாருங்கள் சில தினங்களில் அப்படியே பல்டியடிப்பார்.