
கந்தர்வகோட்டை அருகே அப்துல் கலாம் நினைவு தின கருத்தரங்கம்
கந்தர்வகோட்டை ஜீலை 29
.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கமும் மற்றும் புலிகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு மணிமேகலை தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவ கோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ரகமதுல்லா அப்துல் கலாம் நினைவு தினம் குறித்து பேசும் பொழுது தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரம் தீவில் கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாள் பிறந்த அவரின் முழுப் பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். கலாமுடன் உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர். ஒரு சகோதரி. கடைக்குட்டியான கலாம், குடும்ப ஏழ்மை காரணமாக பள்ளி நாட்களில் சைக்கிளில் வீடு வீடாய் சென்று செய்தித்தாள் விநியோகித்ததை தன் வாழ் நாள் முழுவதும் பேசி மகிழ்ந்திருக்கிறார்.
1958-ம் ஆண்டு இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றார். அப்போது கலாமின் சம்பளம் ரூ. 250 தான். தனது சிந்தனையாலும், உழைப்பாலும் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைகோள் திட்டத்தில் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து திரிசூல், அக்னி, பிரித்வி ஏவுகணை திட்டங்களுக்கும் இயக்குநராகப் பணிபுரிந்தார். 1998-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி பொக்ரானில் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தினார். பணி ஓய்வு பெற்ற பின்னர் இந்தியாவின் அறிவியல் ஆலோசகராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான “பாரத ரத்னா” உட்பட பல மதிப்புமிக்க விருதுகளால் கௌரவிக்கப்பட்டார்.
நாட்டின் சிவிலியன் விண்வெளித் திட்டம் மற்றும் இராணுவ ஏவுகணை மேம்பாட்டில் அவரது முக்கிய பங்கிற்காக அவர் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று கருதப்பட்டார் .
மேலும், 1998 ஆம் ஆண்டில், இந்தியாவின் போக்ரான்-II அணு ஆயுத சோதனைகளுக்கு அவர் சில குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தார்.1992 ஆம் ஆண்டு , பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டு, கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இந்தியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்களின் வளர்ச்சியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று கருதப்பட்டார். அவர் 2002 முதல் 2007 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார்.
மேலும் புலிகள் பாதுகாப்பு தினம் குறித்து பேசும் பொழுது ஜூலை 29 சர்வதேச புலிகள் தினத்தைக் கொண்டாடுகிறது. வேகமாக முன்னேறி வரும் உலகமயமாக்கல் உலகம், புலி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த அற்புதமான விலங்குகளையும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களையும் பாதுகாப்பதே சர்வதேச புலிகள் தினத்தின் முதன்மை நோக்கமாகும். என்று பேசினார். இந்நிகழ்வில் ஆங்கில ஆசிரியை சிந்தியா, கணிப்பொறி உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.