July 29, 2025
தமிழகத்தில் தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்திட மாவட்டம் தோறும் கண்காணிப்புக்குழு அமைக்க விலங்குகள் நல கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்திட மாவட்டம் தோறும் கண்காணிப்புக்குழு அமைக்க விலங்குகள் நல கூட்டமைப்பு கோரிக்கை

நிலக்கோட்டை, ஜூலை 30-

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், தெருவோர அனாதையாக வாழும் விலங்குகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக செயல்படும் நிறுவனத்தின் துணைத் தலைவர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

கடந்த பத்து ஆண்டுகளில் தெருவோர நாய்களின் கருத்தடைகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் இனப்பெருக்க அதிகமாகி ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களாக மாறுவதாக அதனை கருணை கொலை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பெற்று இருப்பதாக ஒரு செய்தியை அறிந்தோம்.

அதன் அடிப்படையில் விலங்குகள் நல கூட்டமைப்பு சார்பாக தமிழகத்தில் பன்முகத்தன்மை கொண்ட கால்நடை மருத்துவமனைகள் 2 ஆயிரத்திற்கும் உள்ளது. இதில் மருத்துவர்கள் உதவியாளர்களிட பணியில் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தப் பெரிய கட்டமைப்பை உருவாக்கியும் விலங்குகளை ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்ய உத்தரவிடுவது விலங்குகள் உரிமைகளுக்கு எதிரான என்பதை வலியுறுத்துகிறோம். தெருவோர விலங்குகள் மனிதர்கள் மோதலுக்கான பின்புலத்தையும் பின்னணியும் நம் ஆராய வேண்டும். வள்ளலார் பல்லுயிர் காப்பகத் திட்டத்தின் மூலம் விலங்குகள் நலனுக்காக தன்னார்வ அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட 20 கோடி அளவிலான நிதிகளில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கின்றன.

இந்த அமைப்புகள் மூலமாக முறையாக கருத்தடைகள் செய்யாமல் இருந்த காரணத்தாலும் பல்வேறு பல்வேறு உணவுகள் தண்ணீர் உள்ளிட்ட அதியவாசிய பொருட்கள் கிடைக்காத காரணத்தாலேயே நாய்கள் அவதிக்குள்ளாகிறது. இதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படுகின்ற ஒரு மோதலால் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் நாய்களை எதிரிகளாக பார்க்கின்றனர்.

எனவே அரசு அதிகாரிகள் இதனை சரி செய்ய பல்வேறு இடங்களில் நாய்கள் வாழும் இடத்திலிருந்து மலை பகுதிகளுக்கு கொண்டு போய் விட்டு விடுதல், சில நேரங்களில் கொன்று புதைத்து விடுதல் இது போன்ற நிலையை தவிர்க்க விலங்குகள் நலன் என்ற பெயரில் விளங்குகளுக்காக அரசு ஒதுக்கப்பட்ட பணத்தை பெற்று முறைகேட்டில் ஈடுபடும் அமைப்புகள் அடையாளம் கண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருவோர நாய்கள் மனிதர்களுக்குள்ள பிணக்குகள் மற்றும் தொடர்பான குறைகளை ஆய்வு செய்ய தனி குழு அமைத்தல் வேண்டும், மாவட்ட அளவில் விலங்குகள் ஆர்வலர்கள், வல்லுநர்கள் மற்றும் கால்நடை மருத்துவரிடம் ஒரு முறையான கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும்.

தெருவோர நாய்கள் கருத்தடைக்கு பயிற்சி பெற்ற தன்னார்வலை அதிகப்படுத்தி கருத்தடை செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும், மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும், பல்வேறு இடங்களில் வெப்ப காலங்களில் தெருக்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும், விலங்குகள் நல அமைப்புகளை ஒருங்கிணைந்து விரிவான செயல் திட்டம் மற்றும் கொள்கை வடிவமைத்தல் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் விலங்குகளுக்கும்,மனித சமுதாயத்திற்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்க முடியும் எனவே அரசு கருணை மற்றும் நியாயமான நடவடிக்கை எதிர்நோக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அறிக்கை வெளியிட்டனர்.

இந்த வெளியிட்ட போது உடன் தமிழ்நாடு புதுச்சேரி விலங்குகள் நல கூட்டமைப்பு தலைவர் ஜெரால்டு, நல அமைப்பு மாவட்ட பொறுப்பாளர் சக்திவேல் உள்பட பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *