July 29, 2025
கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நெல்சன் மண்டேலா, மலாலா, நாடுகளுக்கு இடையே போரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நெல்சன் மண்டேலா, மலாலா, நாடுகளுக்கு இடையே போரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கந்தர்வகோட்டை ஜீலை 27.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கலந்துரையாடுதல், விவாதம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவர்களுக்கு நாடுகளுக்கு இடையே போரினால் ஏற்படும் பாதிப்புகள், மலாலா, நெல்சன் மண்டேலா என்ற தலைப்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

நாடுகளுக்கு இடையே போரினால் ஏற்படும் பாதிப்புகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் போரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதித்தனர். ஒரு நாட்டில் போர் ஏற்பட்டால் ஒரு நாட்டின் மக்களின் உயிரிழப்பு, வாழ்வதாரம் பாதிப்பு, பொருளாதாரம் பாதிப்புகள், நாட்டின் முன்னேற்றம் மிகவும் தடைப்படும் என மாணவர்கள் கலந்துரையாடினார்.

போர் செய்வதை விட ஒற்றுமையாக வாழ்வதே சிறந்தது என மாணவர்கள் தெரிந்து கொண்டனர். மலாலா என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் மலாலா தன்னுடைய சிறுவயதிலேயே அவரது கல்வி மற்றும் மனித உரிமைகள் மீதான உறுதியான போராட்டம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருந்தது. அவரது தைரியம் மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்புக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டார்.

2014 ல் அமைதிக்கான நோபல் பரிசை இந்திய குழந்தைகள் உரிமை ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொண்டார்.

நான் மலாலா என்ற சுயசரிதை உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார். நெல்சன் மண்டேலா என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்சன் மண்டேலா 1964 இல் சிறையில் அடைக்கப்பட்டார், 1990 இல் விடுவிக்கப்பட்டார்.

அவர் ராபன் தீவு உட்பட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார். சிறைவாசத்தின் போது, அவர் தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தார், மேலும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு முடிவு கட்டுவதற்கான சர்வதேச அழுத்தத்தை உருவாக்க உதவினார்.தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனநாயகத் தேர்தல்கள் 1994 இல் நடத்தப்பட்டன.

அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டபோது, நெல்சன் மண்டேலா நாட்டின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியானார்.மண்டேலா தனது வாழ்க்கையின் மீதமுள்ள ஆண்டுகளை தனது நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார்.

என்று மாணவர்கள் சிறப்பாக கலந்துரையாடினார்கள்.

சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *