
மதுரை கோயில்களில் ஆடிப்பூரம்: அம்மன்களுக்கு வளையல் காப்பு !அன்னதானம் :
மதுரை:
மதுரை பகுதி கோயில்களில் திருவாடிப்பூரத்தை ஒட்டி, கோயில்களில் அம்மனுக்கு, பக்தர்களால் வளையல் காப்பு அணிவிக்கப்பட்டது.

இதையொட்டி, மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் ரவி பட்டர், வராஹி, துர்க்கை, மீனாட்சி,, மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து, அம்மனுக்கு வளையல் காப்பு அணிவித்தார்.
கோயில் நிர்வாகிகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், வளையல்கள், திருமாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது.
மதுரை வைகை காலனி கிழக்கு பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் ஆலயத்தில், பட்டர் கோபாலகிருஷ்ணன், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார்.
மதுரை யாரணைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், அர்ச்சகர் மணிகண்டன், பூஜைகளை செய்து வளையல்களை அம்மனுக்கு அணிவித்தார்.
கோயில் தலைவர் முருகன், செயலர் சிவா, பொருளாளர் சந்திரன் ஆகியோர்கள் பல வகை உணவுகளை பிரசாதமாக வழங்கினர்.

மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், அம்பாள், துர்க்கை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளை, கோயில் நிர்வாகிகள் செய்தனர்.
தலைவர் சுதர்சன, நிர்வாகிகள் இந்திரா, கல்யாணி, திலகம், மீனாட்சி, சிகாமணி ஆகியோர்கள், பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.