
மதுரை கோயில்களில் ஆடிப்பூரம்: அம்மன்களுக்கு வளையல் காப்பு: அன்னதானம்:
மதுரை:
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 க்குட்பட்ட ஐயர்பங்களா காவேரி நகர், மீனாட்சி தெரு, மந்தையம்மன் கோவில் தெரு, மகாலட்சுமி நகர், பரசுராமபட்டி, காந்தி நகர், சர்வேயர் காலனியிலிருந்து மாட்டுத்தாவணிக்கு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்தும் (சோதனை ஓட்டம்) மற்றும்

கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 , விரிவாக்கம் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.265.25 கோடி மதிப்பீட்டில் இரண்டு சிப்பங்களாக புதிய பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் 324.78 கி.மீ அளவில் பாதாள சாக்கடை மெயின் பைப்லைன், 13796 பாதாள சாக்கடை தொட்டிகள் , 39712 வீட்டு இணைப்புகள் மற்றும் இரண்டு புதிய பம்பிங் மெயின் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஐயர்பங்களா காவேரி நகர், மீனாட்சி தெரு, மந்தையம்மன் கோவில் தெரு, மகாலட்சுமி நகர், பரசுராமபட்டி, காந்தி நகர், சர்வேயர் காலனியிலிருந்து மாட்டுத்தாவணிக்கு செல்லும் சாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் சோதனை ஓட்டத்தினையும் மற்றும் கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவிப் பொறியாளர் முருகன், தியாகராஜன், கிருஷ்ணா, மாமன்ற உறுப்பினர் துரைப்பாண்டி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.