
சமூக நீதி போற்றும் இந்த திராவிட மாடல் ஆட்சியில் நடக்கும் ஆணவப் படுகொலைகளின் எண்ணிக்கை தினமும் கூடிக் கொண்டே போகிறது
ஆணவப் படுகொலை என்றாலே அது உடுமலைப்பேட்டை சங்கர், தர்மபுரி இளவரசன், சேலம் கோகுல்ராஜ் இவர்களது படுகொலைகள் தான் இங்கு அதிகமாய் பேசப்பட்டன. காரணம் ஊடகங்கள் .. ஆனால் இந்த ஆட்சியில் ஊடகங்கள் கண்டு கொள்ளாது இருட்டடிப்பு செய்த கொலை பாதகங்கள் பல…….
- விருதுநகர் கோவிலாங்குளம் – அழகேந்திரன் படுகொலை ( 23.06. 2024)
- சிவகங்கை திருப்புவனம் – திவ்யா எரித்து கொலை ( 08.06. 2021)
- கும்மிடிப்பூண்டி காரணி – கௌதமன் படுகொலை ( 17.09. 2021)
- கும்பகோணம் பந்தநல்லூர் – பிரபாகரன் படுகொலை (09.10.2021)
- கன்னியாகுமரி தோவாளை – சுரேஷ்குமார் படுகொலை ( 08.11.2021)
- கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் – ஹரி-நிவேதா தம்பதியர் பெட் தோல் ஊற்றி எரித்துக் கொலை ( 20.11.2021)
- கும்பகோணம் சோழபுரம் – சரண்யா-மோகன் தம்பதியர் வெட்டி படுகொலை (09.06.2 022)
- கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி – ஜெகன் படுகொலை (21.03.2023)
- கிருஷ்ணகிரி ஊத்தங்கரை – சுபாஷ் படுகொலை (15.4.2023)
- நெல்லை திசையன்விளை -முத்தையா படுகொலை (23.07.2023)
- தேனி பெரியகுளம் – மாரிமுத்து-மகாலட்சுமி தம்பதியர் படுகொலை (05.08.2023)
- தஞ்சை பட்டுக்கோட்டை – ஐஸ்வர்யா படுகொலை (03.01.2024)
- மதுரை திருமங்கலம் – மகாலட்சுமி -சதீஷ்குமார் படுகொலை (30.01.2024)
- சென்னை சீனிவாசா நகர் – இளைஞர் படுகொலை (31.1.2024)
- சென்னை பள்ளிக்கரணை – பிரவீன்-ஷர்மிளா படுகொலை (24.02.2024)
- ஈரோடு சத்தியமங்கலம் – ஹாசினி படுகொலை . (07. 03. 2024)
(இதில் ஜெயப்பிரகாஷ் மகன் சுபாஷ் ஆதிக்க சாதியை சேர்ந்த மஞ்சுவை காதலித்த நிலையில் சுபாஷ் தனது தங்கையை வண்டியில் அழைத்து செல்லும் போது வண்டியை விட்டு மோதி அவரது சகோதரி ஹாசினி இறந்தார்.. சுபாஷ் இடுப்பு எறும்பு முறிந்த நிலையில் படுக்கையில் கிடக்கிறார்.)
- மதுரை அவனியாபுரம் – கார்த்திக் படுகொலை (17.04.2024)
- நெல்லை – காதலர்களுக்கு தஞ்சமளித்த சிபிஎம் அலுவலகம் சூறையாடல்..
( பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மதன்குமார் – தாட்சாயணி இருவரும் பல வருடங்கள் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில் திருமணத்தை பதிவு செய்ய சென்ற நிலையில் கொலை மிரட்டலுக்கு பயந்து CPM கட்சியை நாடினார். அவர்களுக்கு CPM கட்சியினர் உதவிய நிலையில் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது
- நெல்லையில் ஆணவ கொலை.
நெல்லை சாந்தி நகர் பகுதியில் கள்ளகுறிச்சியில் இருந்து தனது காதலியை பார்க்க வந்த விஜய் என்ற வாலிபரை பெண்ணின் சகோதரர் சிம்சன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் வெட்டி கொலை செய்தனர். ( 2.12.2024)
- நெல்லையில், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த பட்டியலின வாலிபரான ஐ.டி. ஊழியர் திரு. கவின் த/ பெ. சந்திரசேகர் என்பவர் தனது தந்தையின் கண்முன்னே நேற்று வெட்டி படுகொலை செய்துள்ளார்.. ( 27.07.2025)
இதில் பெரும்பான்மையான சம்பவங்கள் முதல் இரு நாட்கள் பேசப்பட்டு பின்னால் அதைப்பற்றி எந்த ஒரு சலனமும் இல்லாமல் மக்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.ஒட்டுமொத்தமாக வெறும் வெற்று விளம்பரங்களை மட்டுமே பேசி தனிமனித தவறுகளையும் சினிமாவில் நடக்கும் அரைகுறை சமூக நீதியையும் கட்டுரைகளாக எழுதி விவாதித்து தங்களை சமூக நீதியாளர்களாக தங்களை முற்போக்குவாதிகளாக காட்டிக் கொள்ளும் முகநூல் உலகம் முதற்கொண்டு அனைத்து சமூக ஊடகங்களும் பேசப்பட வேண்டிய நிஜங்களில் வாயை மூடி மௌனித்து கிடக்கின்றது தமிழ்நாட்டில்………
தமிழ்நாட்டின் நான்காவது தூண்கள் தொடர்ந்து ஆளும் அரசுக்கு சார்பான செய்திகளை மட்டுமே வெளியிட்டு அரசின் விளம்பரதாரராக செயல்படுவதும் தொடர்ந்து உயர்ந்து வரும் ஆணவ படுகொலைகளை பேசும் பொருளாகாமல் அதைப் பற்றிய எந்த ஒரு விவாதங்களையும் நடத்தாமல் பூசி முழுகுவதும் மிகவும் ஆபத்தான போக்கு……….
பத்திரிகைகளில் வந்து மக்களுக்கு தெரிந்தது நம்மால் தேடி எடுக்க முடிந்தது மட்டும் 20 கொலைகள் உண்மையில் இதில் விடுபட்டவர்கள் இருக்கலாம் திராவிட மாடல் ஆட்சி நடப்பதாக பாவலா காட்டப்படும் இந்த நிலம் எந்த விதத்திலும் முற்போக்கான அல்லது சமூக நீதிக்கான நிலமல்ல…….
சாதி சங்கங்கள் சாதி அமைப்புகள் கூர்த்தீட்டப்பட்டு அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் தேர்தல் நடந்து அவர்களை வளர்த்தெடுக்கும் கட்சிகள் அரசியலில் வெற்றி காணும் இழிவான பிற்போக்குத்தனமான ஜனநாயகமற்ற ஒரு நிலம் தான் இந்த திராவிட மாடல் ஆட்சியில் இருக்கும் இந்த நிலம்………..