
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 4 ஆண்டுகளில் செய்ய முடியாததை 4 மாதத்தில் எப்படி செய்வார்கள் ஆர்.பி. உதயகுமார் கேள்வி.
வாடிப்பட்டி, ஜூலை.22.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா100 கிராம கோவில்களில் 100 நாட்கள் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ராமையன்பட்டியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் மு. காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், கருப்பையா, தமிழரசன், பேரவை மாநில நிர்வாகி ராஜேஷ் கண்ணா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிர்வாகி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆர் பி உதயகுமார் முத்தாலம்மன் கோவிலில் வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி இளைஞர் இளம்பெண் பாசறையினருக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
2021ல் ஆட்சிக்கு வந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற நிலையில் ஆட்சிக்கு வருவதற்கு முன் எல்லோருக்கும் ஆயிரம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்தபின் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே என்று கூறி ஏமாற்றி விட்டார் . அதனால் பல குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு ஒரு அரசாங்கமே ஒரு பெண்ணிற்கு தகுதியில்லை என்று சொல்லும் போது நான் எப்படி வாழ்வது என்று கணவன்மார்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். 4 வருடத்தில் செய்யாத உதவியை நான்கு மாதங்கள் இருக்கின்ற நிலையில் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
ஆட்சியை விட்டு வீட்டுக்கு போகின்ற நிலையில் அம்மா வாங்க ஐயா வாங்க ஆயிரம் ரூபாய் தரோம் என்று கூறி உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாமில் நடத்தி வருகிறார்கள்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் மனு பெற்றார்கள் ஆட்சிக்கு வந்த பின் மனு பெற்றார்கள். ஆட்சியை விட்டு போகும் போதும் மனுக்கள் பெறுகிறார்கள். இதை எங்கே கொண்டு போய் போடப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. திமுக ஆட்சியில் வழங்கப்படும் உரிமைத் தொகை அதிமுக எடப்பாடியார் ஆட்சியில் இன்னும் கூடுதலாக உங்கள் வீட்டுக்கே வந்து உரிமை தொகை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வருமா வராதா என்ற நிலையில் 2 கோடி 18 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பாரபட்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது. எடப்பாடி யாரின் 10 நாள் சுற்றுப்பயணத்தில் பயந்து போய் உள்ள ஸ்டாலின் 2026 தேர்தலில் யார் முதலமைச்சர் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சொல்ல வேண்டியவர்களே தெளிவாக சொல்லிவிட்டார்கள். 2026 செய்ன்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடி யார் அவர்கள் கொடி ஏற்றுவார்கள்.
அதிமுக 8 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏற்றப்படாத மின்சார கட்டணம் சொத்து வரி உங்கள் ஆட்சியில் குப்பைக்கு கூட வரியை உயர்த்தி விட்டீர்கள்.முதலமைச்சர் பதவி மக்களால் மக்களுக்காக உழைக்கக் கூடியவர் உட்காரக் கூடிய பதவி. அது உங்கள் குடும்ப சொத்து அல்ல. என்று கூறி மக்கள்காப்போம் தமிழகம் காப்போம் மீட்போம் மீட்போம் தமிழ்நாட்டை மீட்போம் என்று கூறி கோசம் எழுப்பினார். இதில் கட்சி நிர்வாகிகள் பாலாஜி, கார்திக், பெரியசாமி, பாண்டி, ஆனந்த், பாண்டி கோட்டைமேடு பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொறியாளர் குரு பார்த்திபன் நன்றி கூறினார்.