
காரியாபட்டியில் ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம்
காரியாபட்டி, ஜூலை: 22 .
காரியாபட்டி யில் கபால காளியம் மன் கோவில் வருஷாபிஷேகம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் , காரியாபட்டி கே செவல்பட்டியில், அமைந்துள்ள 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷா பிஷேகம் மற்றும் பாலாப ஷேகம் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக, விக்னேஸ்வர பூஜை. கணபதி ஹோம். அஷ்டலட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமத்துடன் விழா தொடங்கப்பட்டது . விழாவில், 1008 பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கபால காளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதன் பிறகு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப் பட்டது. விழாவில்,
சிறப்பு அழைப்பாளராக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். விழாவில், தி.மு.க ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ் வாணன், பேரூராட்சித் தலைவர் செந்தில் மற்றும் பலர் பங்கேற்றனர் விழா ஏற்பாடு களை, கோவில் நிர்வாகி செல்வக்கனி செ ய்திருந்தார்.