
திண்டுக்கல்லில் இலவச மருத்துவ முகாம்.
திண்டுக்கல் லைஃப் கேர் கிளினிக் ஹெல்த் சென்டர் மற்றும் சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் சோலை கால் ரோட்டில் அமைந்துள்ள லைஃப் கேர் கிளினிக் ஹெல்த் சென்டரில் நடைபெற்றது.
மருத்துவ ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பொது மருத்துவர் சர்க்கரை நோய் நிபுணர் ஆரிப் அகமது மற்றும் பெண்கள் மற்றும் பொது மருத்துவர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
இம் முகாமில் சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல், ரத்த அளவு, காது கேளாதவர்களுக்கான ஆடியோ கிராம், கண் பரிசோதனைகள், சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு. பல் தொடர்பான சிகிச்சை இலவச பரிசோதனையாக செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் இல்லம் தேடி மருத்துவ சேவை பேகம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு தொடங்கப்பட்டது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டார்கள்.