
ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண் கத்தியால் குத்தி கொலை
ஸ்ரீபெரும்புதூர் ஜூலை 20
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் பகுதியில் நாகப்பட்டினத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற இளம் பெண் தனது நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சௌந்தர்யா குடியிருக்கும் வீட்டின் அருகில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு எட்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார்
இருவரின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவே இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது
நிச்சயதார்த்தம் நடந்த சில தினங்களிலேயே சௌந்தர்யா வேறொரு ஆண் நண்பருடன் பழகி வந்தது தினேஷுக்கு தெரிய வந்துள்ளது
இதுகுறித்து தினேஷ் பலமுறை எச்சரித்துள்ளார்.
இந்த சூழலில் சௌந்தர்யா தினேஷின் போன் நம்பரை பிளாக் செய்து விட்டு ஆண் நண்பருடன் பழகி வந்துள்ளார்
இதனால் மிகவும் மன வேதனை அடைந்த தினேஷ் நேற்று இரவு சௌந்தர்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து சௌந்தர்யாவிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார்
இந்த வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்து தினேஷ் தான் வைத்திருந்த கத்தியால் சௌந்தர்யாவின் முகம் கை, கால் என பல இடங்களில் தாக்கி கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்
இந்த கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சௌந்தர்யாவின் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆண் நண்பருடன் சௌந்தர்யா பழகி வந்ததே இந்த கொடூர கொலைக்கு காரணம் எனவும்,
தப்பி ஓடிய தினேஷ் நாகப்பட்டினத்தில் சரணடைந்து விட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
நிச்சயம் செய்யப்பட்ட காதலியை காதலனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.