March 2, 2026
ஞானமே - கம்பீரம்.

ஞானமே - கம்பீரம்.

எனக்குள் நான் என்னவாக இருக்கிறேன்?
எனக்குள் நான் எந்த இடத்தில் இருக்கிறேன்?
உண்மையான தேடல்
ஓஷோ
புத்தர் ஞானமடைந்த பிறகு
காசிக்கு வந்தார்.
காசி அரசன் அவரைப்
பார்க்க வந்தான்.
அவன் கேட்டான்…
“நான் உன்னிடம் எதுவும்
இருப்பதைப் பார்க்கவில்லை,
நீ வெறும் ஒரு பிச்சைக்காரன்.
“இருந்தபோதிலும்,
உன்னுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது…”
நான் என்னை ஒரு பிச்சைக்காரனாக உணர்கிறேன்.
உன்னிடம் எதுவும் இல்லை.
ஆனால்,
நீ நடக்கும் விதத்தை…
நீ பார்க்கும் விதத்தை…
நீ சிரிக்கும் விதத்தை…
பார்க்கும் பொழுது,
இந்த முழு உலகமும் உன்னுடைய பேரரசாக இருப்பதைப் போலத் தெரிகிறது.
மேலும், கண்களால் பார்க்கக்கூடிய எதுவும் உன்னிடம் இல்லை — எதுவுமே இல்லை!
எனவே உன்னுடைய சக்தியின் ரகசியம் எங்குள்ளது?
நீ பேரரசனைப் போலத் தோன்றுகிறாய்.
“உண்மையில் எந்தப் பேரரசனும் இது போலத் தோற்றமளித்ததில்லை — இந்த முழு உலகமும் அவனைச் சேர்ந்தது போல…”
“நீ பேரரசனைப் போலத் தோன்றுகிறாய்.
உன்னுடைய சக்தி…
அதன் பிறப்பிடம் எங்கே?”
என்று காசி அரசன் கேட்டார். அதற்கு புத்தர் சொன்னார்…
“அது என்னிடம் இருக்கிறது.
எனது சக்தியின் பிறப்பிடம்,
என்னைச் சுற்றி நீங்கள்
எதையெல்லாம் உணர்கிறீர்களோ…
அவையெல்லாம் உண்மையில்,
என்னுள் இருப்பவை…!”
“என்னைத் தவிர என்னிடம்
வேறொன்றும் இல்லை…!”
ஆனால், அது மட்டுமே போதுமானது.
நான் நிறைவடைந்துவிட்டேன்.
இப்போது நான் எதற்கும்
ஆசைப்படவில்லை.
நான் ஆசையற்றவன் ஆகிவிட்டேன்…!”
உண்மையில்
சுயத்தை அடைந்த ஒருவன்,
ஆசையற்றவன் ஆகிவிடுகிறான்.
இதை நினைவில் கொள்.
“ஆசை” என்பதன் அர்த்தம்…
நீ உனக்குள்ளே நிறைவடையவில்லை என்பதே.
நீ ஏதோ ஒன்றை இழந்துவிட்டு,
அதற்க்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாய்.
ஒரு ஆசையிலிருந்து, மற்றொன்றிற்கு என்று நிறைவை தேடி போய் கொண்டே இருக்கிறாய்.
இந்த மாதிரியான தேடல்
ஒரு போதும் முடிவதில்லை.
முடியப்போவதுமில்லை.விஞ்ஞான் பைரவ் தந்த்ரா..


ஓஷோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *