
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்
மதுரை.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி கோவிலில் வரும். 14ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அமைச்சர் மூர்த்தி தலைமையில் திருப்பரங்குன்றம் கோவிலில் பல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை திருப்பரங்குன்றம் குடமுழுக்கு விழாவில், முன்னேற்பாடு நிகழ்ச்சியாக கோவில் தேவ சேனா மண்டபத்தில் உள்ள யாகசாலை பூஜைகள் மணிக்கு துவங்குகிறது. மேலும், கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக அனைத்து துறை அலுவலர்கள் . ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் பிரவின்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா, அறநிலைய துறை துணை ஆணையாளர், காவல் ஆணையர் லோகநாதன் , சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் உதயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள், சிறப்பு பேருந்துகள், வாகன நிறுத்தம் மற்றும் குடிநீர் ,சுகாதார வசதி, அவசர கால ஆம்புலன்ஸ் வசதிகள், ஆகிய பல் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.






