
திண்டுக்கல் மாநகராட்சி 20 வது வார்டு மாமன்ற உறுப்பினரை அலட்சியபடுதும் துப்புரவு ஆய்வாளர் சுப்பையா!
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சியில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில் 4.7.2025 வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் மாமன்ற கூட்டம் வழக்கம்போல் காலை 10.30 மணியளவில் தொடங்கியது. கூட்டத்தில் 20 வது வார்டு மாமன்ற உறுப்பினரான ஜெயந்தி மாநகராட்சி ஆணையர் ஆன செந்தில் முருகனிடம் கூறுகையில் வார்டு கவுன்சிலர் ஆகிய நான் எனது வார்டு தூய்மை பணி சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரி துப்புரவு ஆய்வாளர் சுப்பையா அவரிடம் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டேன் ஆனால் என்னுடைய அழைப்பை நிராகரித்து வருகிறார் என்று குற்றச்சாட்டை கூறினார்.

மக்கள் பிரச்சினைகளை மாமன்ற கூட்டத் தொடரில் எடுத்துக் கூறுவதை விட தற்போது அதிகாரிகளின் மேல் உள்ள குற்றச்சாட்டுகளை அதிகம் எடுதுரைக்கவேண்டியிள்ளது.
துப்புரவு ஆய்வாளரான சுப்பையா மேல் மேலும் திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையம் பகுதிகளில் அத்துமீறி கடைகள் அமைத்திருப்பவர்கள் மீது அபராத தொகை விதித்துள்ளதுமாநகராட்சி அந்த அபராததொகையை வசூல் செய்து மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல் துப்புரவு ஆய்வாளர் சுப்பையா தனது வீட்டுக்கு எடுத்து செல்வதாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன.

இதற்க்கு முன்பு தமிழகத்திலேயே பல கோடிகளை சுருட்டிய திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் என அதிகாரிகள் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு தமிழகம் முழுவதும் பேசும் பொருளாக மீண்டும் திண்டுக்கல் மாநகராட்சி அதே போல் ஒரு நிகழ்வு நடைபெறாமல் தடுத்து நிறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் நடவடிக்கை எடுப்பாரா? என பொதுமக்கள் பரவலாக பேசப்பட்டு வருவது பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சம்மந்தப்பட்ட துப்புரவு ஆய்வாளர் சுப்பையா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.






