
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வத்தலக்குண்டு கள்ளர் விடுதி அருகே சமுதாயக்கூடம் கட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்த வருவாய் துறை.
நிலக்கோட்டை, ஜூலை.5-
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வத்தலகுண்டு பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரில் கடந்த சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கள்ளர் கல்விக் கழகத்தின் இடத்தில் அரசு கள்ளர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருவாய்த் துறையும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து அப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அரசின் நிதியில் ஒரு கோடி மதிப்பில் கட்டிடம் கட்டுவதற்கு பணியை துவங்க முயற்சி செய்து வந்தனர். இதை அறிந்த வத்தலகுண்டு பிரமலைக்கள்ளர் வளர்ச்சி சங்கம், மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பினர் விடுதி அருகே உள்ள இடம் கள்ளர் கல்வி கழகத்திற்கு சொந்தமான இடம் அந்த இடத்தில் சமுதாயக்கூடம் கட்டினால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டதாரர்களை அழைத்து முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிலக்கோட்டை தாலுகா அலுவலக தலைமை நில அளவையர் விக்ரம் தலைமையில் சமாராச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த சமரச பேச்சுவார்த்தையில் வத்தலகுண்டு கள்ளர் விடுதி அருகே கள்ளர் கல்வி கழகத்திற்கு சொந்தமான இடம் என்பது விசாரணையிலும், அளவையிலும் உறுதிபட தெரிகிறது. எனவே அந்த இடத்தில் வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகம் சமுதாய கூடம் கட்டுவதற்கான போதுமான இடம் இல்லாததால் வேறு இடத்தில் சமுதாய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பினரிடம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பின் நன்றி தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சமாதான கூட்டத்தில் வத்தலகுண்டு பிரமலைக்கள்ளர் வளர்ச்சி சங்க தலைவர் அண்ணாதுரை, நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொருளாளர் இளங்கோ மற்றும் வழக்கறிஞர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக கடந்த மூன்று மாதமாக வத்தலக்குண்டு நிலக்கோட்டை பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்ததை வருவாய்த் துறையினர் முற்றுப்புள்ளி வைத்தது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.