
இந்த உலகத்தை கெடுப்பது யார்?
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல தவறு என்று தெரிந்தும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான் இது வந்து ஒரு கம்யூனிஸ்ட் சித்தாந்தம் இந்த கம்யூனிஸ்டுகள் திமுகவுடன் செம்பு தூக்கிகளாகவும் தூக்குத் தூக்கிகள் ஆகவும் தேர்தல் வரும் பொழுது சில கோடிகளை பெற்றுக் கொண்டு கேடி வேலை செய்யும் கம்யூனிஸ்டுகளாக மாறிப்போனது.
அஜித் குமார் கொலை வழக்கு சம்மந்தம்மாக கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாகவும் காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் ஒருவர் கூட வரவில்லை இந்த சிவகங்கை மாவட்டம் எம்.பி. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் ஒரு சின்ன அசைவை கூட காட்டவில்லை ஏனென்றால் ஓட்டு அரசியல் தான் இங்கு வசிக்கும் நாடார் சமுதயதினரிடம் சொற்ப வாக்குகள் மட்டும்தான் உள்ளது ஆதலால் தான் எந்த அரசியல் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை.
குறிப்பாக ஆளும் திமுக அரசு இது முக்குலத்தோர் ஏரியா என்று பிரிவினை செய்து நாடார் இன மக்கள் ஓட்டு நம்மை பாதிக்காது என்பதால் ஸ்டாலின் அடுத்த முதல்வர் பதவிக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார். இங்கு இருக்கும் நிலவரமும் வெளியில் சொல்ல முடியாத அவல நிலையில் உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் திமுகவிற்கு முக்குலத்தோர் என்ற போர்வையில் ரவுடிகள் அரசியல் நீண்ட நெடுங்காலமாகவே நடைபெறுவது உண்டு. மக்கள் நிலைமை எப்படி என்றால் சாதி பார்த்து இங்கு ஓட்டு போடுகிறார்கள் என்பது ஊடகங்களின் விமர்சனம் உண்மையில் அதுவல்ல இந்த ஏரியா ஆற்றுப் பாசனமும் நீர் பாசனமோ இல்லாத வறண்ட ஏரியா இங்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தொழிற்சாலைகளோ தனிநபர் வருமானமும் கிடையாது. எல்லாம் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் இருக்கிறார்கள் தேர்தல் வரும் பொழுது சாராயத்திற்காகவும் சாப்பாட்டிற்காகவும் ஒரு கூட்டம் இருக்கிறது.
இந்த கூட்டம் தான் அரசியல் களத்தில் ஜாதிகளாக காட்டப்படுகிறது இந்த கட்டமைப்பை உருவாக்கியது திராவிட இயக்கங்கள் இதை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம் இவர்கள் அனைவருமே பல காலங்களாக ஜாதிய பார்வையில் செல்வந்தர் ஆகிவிட்டார்கள் ஆதலால் இவர்களை சொந்த ஜாதிக்காரன் எதிர்க்க பயப்படுகிறான் ஊடகங்களும் இவர்களுக்கு துணை போவது கேவலத்திலும் கேவலம் முன்னணி ஊடகங்களுக்கு மட்டும்தான் இவர்கள் விளம்பரம் கொடுப்பார்கள் சிறு பத்திரிக்கையாளர்கள் இவர்களைப் பார்த்து மிரண்டு விடுவார்கள்.
சிவகங்கை மாவட்டம் பக்கத்து மாவட்ட ராமநாதபுரத்தில் ரித்தீஷ் குமார் என்ற நடிகர் அரசியல் பிரவேசம் செய்தார் அவரை எதிர்த்து அவருடைய உறவினர் ரத்தினம் என்பவர் பிரச்சனை என்று தமிழக அரசியலில் வார இதழில் செய்தி வெளியானது.
அந்த நிருபரை ஆர்.சி.ரத்தினம் என்பவர் பாண்டி கம்மா என்ற ஊரில் தூக்கிச் சென்று கொலை செய்ய முயற்சி செய்தார். அப்பொழுது ராமநாதபுரத்தில் எஸ்பி ஆக இருந்தவர் செந்தில்வேலன் அவர் ஆர் சி இரத்தினத்தின் மனைவியை தூக்கி விசாரணைக்கு கொண்டு வந்தார் ஆதலால் அன்று ஒரு கொலை தடுக்கப்பட்டது ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை இதை கோர்ட்டில் எல்லாம் போய் சொல்லவும் முடியாது.
இந்த நிலைமையில் தான் நாடு இருக்கிறது நல்லவர்கள் எல்லோரும் ஒதுங்கிக் கொள்கிறார்கள் அஜித் குமார் கொலை வழக்கு காவல்துறைக்கும் ஆளும் அரசியல் கட்சிக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த செய்தி வெளியிடுவதற்கு முன் கிடைத்த செய்தி இதே நிலைமை நீடித்தால் திமுக ரவுடிகள் சில பேரை குடும்பத்தோடு தூக்கப் போவதாக செய்தியாக பரவிக் கொண்டிருக்கிறது.
ஏனென்றால் ஸ்டாலின் தந்தை கருணாநிதி முதல்வராக இருக்கும்போது அவரது மந்திரி சபையில் இருந்த தா.கிருஷ்ணன் மந்திரியாக இருந்தார் அவரை நடை பயிற்சி செய்யும் போது வெட்டிக் கொன்றார்கள். அந்த கொலையில் எந்த குற்றவாளியும் தண்டிக்கப்படாமல் அழகிரி விடுவிக்கப்பட்டார் இது இந்திய அரசியல் சட்டம் செய்த புரட்சி நாட்டுமக்களை யார் காப்பாற்ற போகிறார்கள் சட்டமா? காவல் துறையா? இந்தியாவை ஆளும் பிஜேபி அண்ணாமலை அமித்ஷா இவர்கள் அனைவருமே திமுகவின் கைக்கூலிகள் இவர்கள் நம்மை காப்பாற்றுவார்களா என்பது கேள்விக்குறி தான்.

இந்தத் தகவல் அனைத்தும் உண்மையானவை நானும் சுதந்திர இந்தியா என்னும் நாளிதழையும் youtube சேனலும் வெப்சைட்டும் வைத்துள்ளேன் எனக்கே சில பேர் அட்வைஸ் செய்கிறார்கள் இவர்கள் மோசமானவர்கள் என்று இதை நான் யாரிடம் பொய் சொல்வது சுதந்திர இந்தியா என்று பெயர் வைத்து சுதந்திரம் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டிய நிலையில் தான் இந்திய தேசத்தின் நிலை உள்ளது வாழுமா ஜனநாயகம் வெல்லுமா ஜனநாயகம் ஆர்.முருகன் ஆசிரியர்.






