March 2, 2026
நிலக்கோட்டை பள்ளி மாணவன் மாயம் போலீசார் தீவிரத் தேடுதல்

நிலக்கோட்டை பள்ளி மாணவன் மாயம் போலீசார் தீவிரத் தேடுதல்

நிலக்கோட்டை, ஜூன் .30-

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஆட்சி நகரைச் சேர்ந்தவர் பாண்டி என்பவர் மகன் துரை பாலா வயது 16. இவர் நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 26 ஆம் தேதி வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் கோவித்துக் கொண்டு சென்று விட்டார் என்ற நிலையில் அக்கம்பக்கம் தேடி வந்தன பெற்றோர்கள் தேடி வந்தனர். இருப்பினும் எங்கு தேடியும் பள்ளி மாணவன் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய பிரபாவிடம் கொடுத்த புகாரின் படி 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் பள்ளி மாணவன் பெற்றோர்கள் திட்டியதால் வீட்டை விட்டு கோவித்து கொண்டு எங்கும் சென்றானா? இல்லை உறவினர்கள் யார் வீட்டிலும் பெற்றோர்களுக்கு பயந்து கொண்டு தங்கி இருக்கிறானா? இல்லை பள்ளி மாணவனை யாரும் கடத்திருக்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் நிலக்கோட்டையில் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *