
காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரின் மரணத்திற்கு காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார் என்கிற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்குதலின் விளைவு தான் அஜித் உயிரிழப்பிற்க்கு காரணம் காவல் துறையினரின் மனித நேயமற்ற செயலை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது. அஜீத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
காவல் துறையினர் கடுமையான தாக்குதலில் மரணம் அடைந்த அஜீத் சம்பவத்தை மனித உரிமை ஆணயம் தானாக முன் வந்து முறையான விசாரண நடத்தி இக்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையா தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
அஜுத் மரணத்திற்க்கு நீதி வேண்டி அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திருபுவனம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆறு தனிப்படை காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.காவல்துறை விசாரணையில் நடைபெற்ற மரணத்திக்கு சம்பந்த பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதியாமல் காவல் துறையினர் பணியிட நீக்கம் மட்டுமே செய்ய படுகிறார்கள் காலம் காலமாக இந்த ஒரே பார்மூலாவை மட்டுமே கடை பிடித்து காவல் துறையினர் வருகின்றனர் .ஆகவே அஜீத் மரணத்தில் சம்பந்த பட்ட காவல் துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
எனவே : இனி வரும் காலங்களில் இது போன்று காவல் துறையினரால் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.