March 3, 2026
போதைப் பாதை அழிவின் பாதை! ரோடு ரோடா கோஷம் போடும் மாணவர்கள்! காவல் ஆய்வாளர் தலைமையில் ஊர்வலம்.

போதைப் பாதை அழிவின் பாதை! ரோடு ரோடா கோஷம் போடும் மாணவர்கள்! காவல் ஆய்வாளர் தலைமையில் ஊர்வலம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலை அரசு மேல்நிலைப்பள்ளியலிருந்து மங்களம் சாலை வழியாக என்.ஜி.ஆர் சாலை வந்து மீண்டும் அரசு பள்ளிக்கு செல்லும் வகையில் திருப்பூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக பல்லடம் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில்போதை விழிப்புணர்வுபேரணி நடைபெற்றது.

அப்போது பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் போதை பாதை அழிவின் பாதை, வேண்டாம் வேண்டாம் போதை, வாழ்க்கை என்ற பூந்தோட்டத்தை அழிக்கும் போதை, என்று பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாதைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பியவாரே அவர்கள் சென்றது பலரின் கவனத்தையும் ஈர்த்தது மதுவிலக்கு உதவி ஆய்வாளர் உமா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *