
போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து அதிக வேகமாக செல்லும் வாகனம் மற்றும் ஒளி வாகனங்களை கண்டறிந்து அகற்றி அபராதம் விதிப்பு
மதுரை.
மதுரை மாவட்டம் காளவாசல் பைபாஸ் பகுதியில் அதிவேகமாக செல்லுதல், அபாயகரமாக ஓட்டுதல்,, அதிக சத்தம் கொண்ட ஒலிப்பான்களை ஒலித்தல், அதிக பயணிகளை ஏற்றி செல்லுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல் போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல் செய்த தனியார் பேருந்துகள் மீது வாகன வழக்கு பதிவு செய்து சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன் முன்னிலையில்,
திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் ( தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்) ஆகியோர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மதுரையை பொறுத்தமட்டில், அண்ணா பஸ் ஸ்டாண்டு, கருப்பாயூரணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், ரயில்வே நிலையம், திருநகர், திருப்பரங்குன்றம், மாட்டுத்தாவணி, அண்ணாநகர் சுகுணா ஸ்டோர், திருப்பாலை, நீதிமன்றம், சோழவந்தான் இல் காமராசர் சிலை அருகே, மாரியம்மன் கோயில், காமராசர் பாலம், வாடிப்பட்டி ஸ்டாண்டு ஆகிய பகுதிகளில் ஆட்டோக்கள் பஸ் நிறுத்தம் அருகே அரசு பஸ்களில் பயணிகள் பயணம் செல்லாத படி குறுக்கும் நெருக்கமாக நிறுத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கின்றனர்.
மேலும், பல ஷேர் ஆட்டோக்கள் அரசு பெர்மிட் இன்றி, அதிகமான பயணிகளை ஏற்றி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
கருப்பாயூரணி, அண்ணா பஸ்நிலையம், அண்ணாநகர் சுகுணா ஸ்டோரில், போலீஸ் பூத் எதிரில் ஆட்டோக்களை சாலையின் நடுவே போலீஸார் முன்பாக, பயணிகளை கூவி, கூவி அழைத்து ஆட்டோவில் ஏற்றுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சோழவந்தானில் வேப்பமரம் ஸ்டாப், ஜெனகை மாரியம்மன் பஸ் நிறுத்தம், வட்டப் பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி போக்குவரத்து இடையூறாக செய்வதாக பொது மக்கள் காவல் துறைக்கு புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம். இது குறித்து, மதுரை மாவட்ட புதிய ஆட்சியர் தலையிட்டு,பெர்மிட் இன்றி, சாலைகளில் வேகமாக செல்லும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவேண்டும்.






