
நிலக்கோட்டை அருகே உலகளவிய தனித்து வாழும் பெண்களுக்கான தின விழா.
பெருகிவரும் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை மது போதைக்கு அடிமையானவர்களை காப்பாற்ற முன்வருமா?
இன்றைய உலகில் பெற்றோர்கள் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம், ஆண்கள் தினம், இளைஞர்கள் தினம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலகளவிய தனித்து வாழும் பெண்கள் தினம் என்று ஒன்று ஒரு தினம் கொண்டாடினார்கள் என்று கேள்விப்படும் போது இன்றைய போதைப் பொருளால் தமிழகத்தில் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பது ஒருபுறம் அதிர்ச்சியையும், மறுபுறம் ஆதங்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டி கிராமத்தில் தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பும், சைல்டு வாய்ஸ் சமூகத் தொண்டு நிறுவனமும், அணைப்பட்டி வைகை அறக்கட்டளையும் இணைந்து உலகளவிய தனித்து வாழும் பெண்கள் தின விழா வ .வீலிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற செயலர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் அண்ணாதுரை முன்னிலை வைத்தார். சைல்ட் வாய்ஸ் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவில் முதிர்க்கன்னி , விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் பெண்கள் இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் மது போதையால் விபத்துக்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது தனிமையில் வாழும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அனைத்து வாழும் பெண்களின் நலனுக்காக விழாவில் தமிழக அரசு தனித்து வாழும் பெண்களுக்கு சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், தனித்து வாழும் பெண்களுக்கு சமூக பொருளாதார மேம்பாடு அடைய தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், மத்திய,மாநில அரசுகள் தனித்து வாழும் பெண்களின் கணக்கெடுப்பு எடுத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் துறையில் தனித்துவமும் முன்னுரிமையும் வழங்க வேண்டும், அனைத்து வாழும் பெண்களின் கணக்கெடுப்பு எடுத்து ஓய்வூதியம் அரசு வழங்க வேண்டும் என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஏராளமான கிராமங்களில் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஒரு கவலையான செய்தியையும் கிராம மக்கள் பகிர்ந்து கொண்டனர். எனவே இன்றைய காலகட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். அதற்கு மாற்று ஏற்பாடு அரசு முன் நின்று செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஆதங்கமும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் ஆளுக்கு நாள் அதிகரித்து வருவதும் இதனால் விபத்துகளும் நோய்வாய்ப்பு அதிகரித்தும் ஏராளமான இறப்புக்கள் ஏற்பட்டு விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரிய ஒரு தமிழகத்திற்கு ஆபத்தாகவே கருதப்படுகிறது. எனவே இது குறித்து ஒரு ஆய்வு நடத்த தனிக்குழு கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சத்யா, கிராமப் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு ஆலோசகர் அண்ணாதுரை கூறியதாவது:- இன்றைய தமிழக முழுவதும் மது போதையால் விபத்து மற்றும மது போதைக்கு அடிமையாகி நோயால் ஏராளமான ஆண்கள் இறந்துவிட்டனர். இதன் காரணமாக ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் விதவையாகி தனித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு அரசு எந்த விதத்திலும் உதவி செய்ததாக தெரியவில்லை. இப்படி தனியாக வாழும் பெண்களுக்கு ஒரு ஆக்கப் பணி செய்ய வேண்டும் என்று இந்த அமைப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் போதை விழிப்புணர்வு மற்றும் விதவை ஆகும் நிலையை குறைக்கவும். இவர்களின் சமூக பொருளாதார நிலை உயரவும் பல்வேறு வகையில் திட்டங்களை உருவாக்கி அரசின் பார்வைக்கு கொண்டு செல்வோம் என்று கூறினார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சத்யா கூறியதாவது:-
மது போதைக்கு அடிமையாகி ஏராளமான ஆண்கள் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளையும், மனைவிகளையும் தனித்து வாழும் சூழ்நிலையில் விட்டு மதுவினால் இறந்து போன தந்தையால் தனித்து வாழும் விதவை, முதியோர், முதிர்கண்ணி போன்றவர்களுக்கு ஆக்கப் பணி செய்ய வேண்டும் என்று இந்த பணியை தொடங்கியுள்ளோம் எனவும், தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வர இந்த அமைப்பு போராட்டம் நடத்தும் எனவும் தெரிவித்தார்.






