
பொதுப் பாதையை ஆக்கிரமித்துபொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் ஆசிரியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா ?
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவில் வசித்து வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரித்து வரும் நாகேஸ்வரி மற்றும் நாகலட்சுமி இருவரும் வீட்டு முன்பு பாதையை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். பொதுமக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களைக் கூட கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
வீட்டின் உரிமையாளர்களிடம் ஏன் இப்படி பாதையை ஆக்கிரமித்து வேலி போட்டுள்ளீர்கள் இவற்றை அப்புறப்படுத்துங்கள் என இரண்டு ஆசிரியர்களிடம் வேலியை அகற்றித் தருமாறு கூறிய போது என் வீடு நான் அப்படித்தான் வேலி அமைப்பேன், உன்னால் முடிந்ததை பார் என தரக்குறைவான வார்த்தைகளால் அப்பகுதி பொதுமக்களை பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..வீட்டின் முன்பு வேலி அமைத்துள்ள ஆசிரியர்கள் இருவரும் எங்களை யாராலும் ஒன்றும் பண்ண முடியாது உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களை மிரட்டும் தோரணையில் பேசி வருவதாலும்.தனிப்பட்ட முறையில் வீட்டின் முன்பு ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ள இரண்டு ஆசிரியர்கள் மீது இதுவரை ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேலிகளையும் அகற்றவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து ஆசிரியர் இருவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.