
ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கடிதம்
நாகர்கோவில் ஜுன் 25
ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார், முதலமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து முத்துக்குமார் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
ஈரான் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தாலும், பதற்றமான சூழ்நிலை தான் காணப்படுகிறது என்று வெளிவருகிற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு மீன்பிடி தொழில் செய்வதற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் உட்பட அனைத்து தமிழர்களின் நிலமை என்னவென்று தெரியவில்லை. ஈரான் நாட்டில் உள்ள தமிழர்கள் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பங்கள் பரிதவிக்கின்றன.
எனவே ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதுடன், பத்திரமாக மீட்க படவும் வேண்டும். எனவே தங்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும். தமிழர்கள் பத்திரமாக மீட்க பட வேண்டும்.’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.