
பெரியகுளத்தில் திமுக நான்காண்டு சாதனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் திருவள்ளுவர் சிலை முன்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர் இளைஞரணி சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா மற்றும் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு இளைஞரணி நகர அமைப்பாளர் சந்துரு தலைமை வகித்தார். நகர செயலாளர் முகமது இலியாஸ், நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் எம்எல்ஏ, தொகுதி பொறுப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் கூட்டத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திமுக செய்த நான்காண்டு சாதனைகள் குறித்து விளக்கி பேசினார்.
இதில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆஜீப்கான், துணை அமைப்பாளர் முத்துராம்ஜி, நகர துணை அமைப்பாளர்கள் இலியாஸ் ரகுமான், அரவிந்தசாமி மற்றும் நகர் நிர்வாகிகள் சேது, சுந்தரபாண்டியன், வாசுகி இராஜபாண்டி, நகர் மன்ற கவுன்சிலர் சுதா நாகலிங்கம், மாவட்ட பிரதிநிதி செந்தில் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.