
தேனி திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நலவாரிய அட்டை, கலைக்குழுவிற்கான கலைகருவிகள், தொழிற்பயிற்சி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் காப்பீடு அட்டை கோருதல் என பல்வேறு கோரிக்கை அடங்கிய 28 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார்.
மேலும், ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினை ஒரு திருநங்கைக்கும், விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையினை ஒரு திருநங்கைக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி, அரசு அலுவலர், பணியாளர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.