
சோமவார பிரதோஷ விழா
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்ம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சு குழி கண்மாய் சாலையில் இயற்கை எழில்சிற சொந்துமலை அடிவாரத்தில் தென்னந்தோப்புக்குள் எழுந்தருளி அருள் பாலித்து வரும் லலிதாம்பிகேஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை லலிதாம்பீஸ்வரர், லலிதாம்பீஸ்வரி, மற்றும் நந்திகேஸ்வரருக்கு சந்தனம், பன்னீர், இளநீர், திருநீர், உள்ளிட்ட 12 அபிஷேகங்கள் செய்யப்பட்டு அருகம்புல்.துளசி. மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மலர்களால சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது.
இந்த பூஜை மற்றும் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாச்சல பாண்டியன் செய்திருந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதான பிரசாதம் பெற்றுச்சென்றனர்.






