
வார இறுதி நாட்கள் , விஷேச நாட்களில் புதிய அரசு பேருந்து வருவதில்லை.!குறிப்பிட்ட நாட்களில் காணாமல் போகும் அரசு பேருந்து! வாடகைக்கு விடப்படுகிறதா என பொதுமக்கள் கேள்வி?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி மலைப் பகுதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் புதிய பேருந்து விடப்பட்டது.
வார நாட்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வந்து செல்லும் இந்த பேருந்து வாரத்தின் இறுதி நாட்களில் அந்த வழியாக இயக்கப்படுவதில்லை. மேலும், முகூர்த்தம் , முக்கிய விஷேச நாட்களில் புதிய பேருந்துக்கு பதிலாக பழைய பழுதடைந்த பேருந்து இயக்குவதால், பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு செல்லும் பேருந்தை அடையாளம் காண முடியாமல் திணறி வருகின்றனர்.
வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 5:15 மணிக்கு தாண்டிக்குடி வழியாக கொடைக்கானல் பகுதிக்கு செல்லும் புதிய அரசு பேருந்துக்கு பதிலாக நத்தம் பகுதிக்கு செல்லும் பழைய அரசு பேருந்து அந்த வழியாக இயக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் அடைந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு செல்லும் பேருந்து எது என்பதை கண்டுபிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேருந்தை மாற்றி விடுவதால் கடும் சிரமத்திற்கு தள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். முக்கியமான விஷேச நாட்களில் புதிதாக இயக்கப்படும் பேருந்து காணாமல் போகிறது. அந்த பேருந்தை அரசு போக்குவரத்து அதிகாரிகள் வாடகைக்கு விடுகின்றனரா? என சந்தேகம் எழுகிறது. பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்படும் புதிய பேருந்துகள் மக்கள் பயன்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.
பொதுமக்களுக்காக விடப்பட்ட புதிய பேருந்தை இதே வழியாக இயக்க வேண்டும். மழை பகுதிக்கு விடப்பட்ட பேருந்தை வேறு இடத்திற்கு இயக்கிய அனுமதிக்க கூடாது. இதுசம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி : செய்தியாளர் : நா.ராஜாமணி.