
பழனியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக விஜயின் 51 வது பிறந்தநாள் விழா
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜா தலைமையில் அதிகாலையில் திருஆவினன்குடியில் விஜய் பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனையடுத்து வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் இணைந்து பட்டாசுகள் வெடித்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அரசு மருத்துவமனையில் பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலன் நகரச் செயலாளர் மீதுன் மாவட்ட இணைச் செயலாளர் விஜய் சிவா ஆகியோர் தங்க மோதிரம் அணிவித்து விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள முதியவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பாக சிறப்பு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
மேலும் பாலசமுத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் இணைந்து புத்தாடை வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டன. மேலும்
அப்பகுதியில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி விஜயின் பிறந்தநாள் விழாவை திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சிறப்பாக விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜ் இளைஞரணி அமைப்பாளர் பிரவீன் குமார் இணைச் செயலாளர் முத்துப்பாண்டி, துணைச் செயலாளர் மாரிமுத்து, முகமது இக்பால், சிவக்குமார், செந்தில் குமார், ஆனந்த், நாகராஜ், கார்த்திகேயன், மாரிமுத்து, சதீஷ்குமார்,மற்றும் மகளிர் அணியை சேர்ந்த ஜெயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது